நவம்பர் 17, குல்காம் (Jammu Kashmir News): ஜம்மு காஷ்மீரில் (Jammu Kashmir) அமைதியை நிலைநாட்டி, அங்குள்ள மக்களின் வாழ்க்கையை முன்னேற்ற மத்திய அரசு (Central Govt) தொடர்ந்து அயராது உழைத்து வருகிறது. அங்குள்ள மக்களுக்கு ஏற்படும் இன்னல்களை தடுக்க, பயங்கரவாத அச்சுறுத்தலை முறியடிக்க இராணுவத்தை (Indian Army) முழுவீச்சில் நிலைநிறுத்தி இருக்கிறது.

ஜம்மு காஷ்மீர் காவல்துறை (JK Police) மற்றும் எல்லைப்பாதுகாப்புபடை (Border Security Force), இந்திய இராணுவம் சார்பில் அவ்வப்போது இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாதிகள் என்கவுண்டர் (Terrorist Encounter) செய்யப்படுவது வழக்கம். தாக்குதல் திட்டத்துடன் காத்திருக்கும் பயங்கரவாதிகளை தேடி அழிக்கும் இந்திய இராணுவத்தின் வேட்டையும் தொடருகிறது.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள குல்காம் (Kulgam), சம்னூ பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ள தகவலை அறிந்த பாதுகாப்பு படையினர், அப்பகுதியை தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். அதிகாரிகள் வந்ததை அறிந்த பயங்கரவாதிகளும் திடீர் தாக்குதல் நடத்தினர். MP Assembly Election 2023: வாக்குப்பதிவு மையத்தில் இருதரப்பு மோதல், கல்வீச்சு.. துப்பாக்கிசூடு?... மத்திய பிரதேசம் தேர்தலில் சம்பவம்.! 

இதனையடுத்து, நேற்று முதல் இரண்டு நாட்களாக பயங்கரவாதிகளை என்கவுண்டர் செய்ய தொடர் தேடுதல் வேட்டை நடந்தது. இதனால் அங்கு இந்திய இராணுவத்தின் 34வது ராஷ்ட்ரிய ரைபிள் படை, 9 பாரா சிறப்பு படை, ஜம்மு காவல்துறை, சி.ஆர்.பி.எப் வீரர்கள் களமிறக்கப்பட்டனர்.

2 நாட்களாக தொடர்ந்த பயங்கரவாதிகள் வேட்டையின் முடிவில், 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்கள் லஷ்கர்-இ-தொய்பா (Lashkar-e-Taiba Terrorist Killed in JK) அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இவர்களின் அடையாளத்தை கண்டறியும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். பயங்கர ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனால் மேற்கூறிய பயங்கரவாதிகளால் இந்திய மண்ணில் செயல்படுத்தப்படவிருந்த சதிச்செயலானது முறியடிக்கப்பட்டு இருக்கிறது.