Visuals Taken From Video (Photo Credit: @karnatakaportf X)

மார்ச் 15, மங்களூர் (Karnataka News): கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூர், பிஜாய் காபிகட், 6 வது மெயின் ரோடு பகுதியில் உள்ள குடியிருப்பில் வசித்து வருபவர் கே.எம் சதிஷ் குமார் (69). இவர் ஓய்வுபெற்ற பிஎஸ்என்எல் ஊழியர் ஆவார். தற்போது தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரின் பக்கத்து வீட்டில் முரளி பிரசாத் என்ற நபர் வசித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே நீண்ட முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அவ்வப்போது இதுதொடர்பான வாக்குவாதம் இருவருக்கும் இடையே ஏற்பட்டு, பின் இருவரும் ஒதுங்கி செல்வது வாடிக்கையாக இருக்கிறது. TN Agri Budget 2025: கரும்பு விவசாயிகளுக்கு தித்திப்பு அறிவிப்பு.. வேளாண் பட்ஜெட் 2025: அறிவிப்புகள் என்னென்ன? விபரம் இதோ.! 

இருதரப்பு தகராறில் அதிர்ச்சி செயல்:

இந்நிலையில், சம்பவத்தன்று முரளி பிரசாத்தை ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த சதிஷ் குமார், முரளியின் வருகைக்காக காத்திருந்தார். முரளி வந்ததும் தனது காரை குறுகிய பாதையில் அதிவேகத்தில் இயக்கி இருக்கிறார். அப்போது, முரளியின் மீது வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. மேலும், சாலையோரம் நடந்து சென்ற பெண் தூக்கி வீசப்பட்டு, அவர் பக்கவாட்டு சுவரில் இருந்த கம்பியில் கால் சிக்கிக்கொண்டு தலைகீழாக தொங்கினார். இந்த பதறவைக்கும் சம்பவம் நொடியில் நடைபெற்று முடிந்தது. இந்த கொடூரத்தின் அதிர்ச்சி வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், காவல்துறையினரிடம் அளித்த புகாரின் பேரில் சதிஷ் குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் உண்டாக்கி இருக்கிறது.

கார் இருவரை அடித்துத்தூக்கிய காட்சிகள்: