Stunt Gone Wrong 18-Year-Old Dies (Photo Credit: @RealBababanaras X)

பிப்ரவரி 11, நீமுச் (Madhya Pradesh News): மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள நீமுச் மாவட்டம், ராம்புரா காவல் எல்லைக்குட்பட்ட பதனா கிராமத்தில் வசித்து வரும் 18 வயது இளைஞர் ராகேஷ் கர்சியா. இவர் சம்பவத்தன்று மஹாராஷ்ட்ரா மாநில எல்லைப்பகுதியில் உள்ள இடத்தில், பெட்சீட் விற்பனை செய்யச் சென்று, அங்கேயே தங்கியிருந்தார். அப்போது, அவருக்கு தலைகீழாக பல்டி அடிக்க வென்றும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. இதனால் இளைஞர் இரண்டு முறை சுழன்றபடி பல்டி அடித்து பெட்ஷீட் மீது விழுந்தார். இதனிடையே, மற்றொரு முறை இளைஞர் முயற்சித்தபோது, தவறுதலாக அவரின் தலை நேரடியாக தரையின் மீது பட்டது. Registration Department: இன்று தைப்பூசம்.. பத்திரங்களை பதிவு செய்ய அருமையான வாய்ப்பு; அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு.! 

மூர்ச்சையானவர் சிகிச்சை பலனின்றி பலி:

இதில் கழுத்து எலும்பு முறிந்து மூர்ச்சையாகி அங்கேயே விழுந்தார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவரின் குடும்பத்தினர், உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதி செய்தனர். டிசம்பர் 13 அன்று விபத்து நேர்ந்த நிலையில், 6 நாட்கள் தொடர் சிகிச்சையில் இருந்தவர், சிகிச்சை பலனின்றி டிசம்பர் 18 அன்று மாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இளைஞரின் உயிரிழப்பு குடும்பத்தினர் இடையே சோகத்தை ஏற்படுத்திய நிலையில், அவரின் மரணம் தொடர்பான வீடியோவும் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

இளைஞரின் விளையாட்டு விபரீதத்தில் முடிந்த காணொளி: