ஏப்ரல் 13, ரேவா (Madhya Pradesh News): மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ரேவா மாவட்டம், மணிகா கிராமத்தை சேர்ந்த 6 வயது சிறுவன் மயங்க். நேற்று மதியம் 2 மணிக்கு மேல் சிறுவன் தனது நண்பர்களுடன் கோதுமை வயல்வெளியில் விளையாடிக்கொண்டு இருந்தார். அங்கு கைவிடப்பட்ட 50 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணறு ஒன்று இருக்கிறது என தெரியவருகிறது. இந்நிலையில், சிறுவன் மயங்க் எதிர்பாராத விதமாக ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளார் அவரின் நண்பர்கள் சிறுவனை முதலில் காப்பாற்ற முயற்சித்தும் பலனில்லை. உடனடியாக சிறுவர்கள் மயங்கின் பெற்றோரிடம் சென்று தகவலை தெரிவித்துள்ளனர். அவர்கள் விரைந்து வயல்வெளிக்கு வந்து மகனை பார்த்துள்ளனர். Goa Shocker: 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் கொலை., சந்தேக வளையத்தில் 20 கட்டுமான தொழிலாளர்கள்.. கோவாவில் அதிர்ச்சி சம்பவம்.!
குழந்தையை மீட்கும் பணிகள் தீவிரம்: ஆனால், அவர்கள் வருவதற்குள் சிறுவன் 40 அடி ஆழத்தில் சென்று சிக்கிக்கொண்டதாக தெரியவருகிறது. இதனால் உள்ளூர் காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்த அதிகாரிகள் உடனடியாக மாநில மற்றும் தேசிய மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலை அறிந்ததும் அதிகாரிகள் குழு நிகழ்விடத்திற்கு விரைந்தது. தற்போது குழந்தைக்கு தேவையான ஆக்சிஜன் உட்பட பிற வசதிகள் அனைத்தும் மருத்துவ குழுவால் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. குழந்தையை பத்திரமாக மீட்கும் முயற்சியில் அதிகாரிகள் களமிறங்கி இருக்கின்றனர். நேற்று மாலை 03:30 மணியளவில் ஆழ்துளை கிணற்றில் சிறுவன் விழுந்துள்ளார். 20 மணிநேரத்தை கடந்தும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. ஆழ்துளை கிணற்றின் பக்கவாட்டு பகுதியில் மேலிருந்து கீழாக பள்ளம் தோண்டப்பட்டு குழந்தையை மீட்கும் முயற்சி நடைபெற்று வருகிறது.
#WATCH | Madhya Pradesh: Rescue operation underway of the 6-year-old child who fell in an open borewell, in Rewa. pic.twitter.com/0BicjHyHvR
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) April 13, 2024