Pregnant Woman (Photo Credit: Pixabay)

மார்ச் 30, மும்பை (Mumbai News): மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் (Mumbai Airport) இருந்து, ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சிக்கு (Ranchi) விமான சேவை வழங்கப்படுகிறது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு விமான நிலையம் வந்த தாய்-மகள், விமானத்தில் பயணம் செய்தனர். இவர்கள் விமான பயணம் செய்யும் முன்பு, கழிவறைக்கு சென்றுள்ளனர். பின் அவர்களின் விமானத்தில் புறப்பட்டு ராஞ்சி சென்றனர். இதனிடையே, தாய்-மகள் பயன்படுத்திய கழிவறையில் (Mumbai Airport Baby Found in Washroom Case) குழந்தை கண்டெடுக்கப்பட்டது. பிறந்த பச்சிளம் குழந்தையை குப்பை தொட்டியில் இருந்து சுகாதார பணியாளர்கள் மீட்டுள்ளனர். பின் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, நேரில் வந்த அதிகாரிகள் குழந்தையின் உடலை மீட்டனர். மருத்துவ பணியாளர்களால் குழந்தையின் மரணம் உறுதி செய்யப்பட்டது. இதனால் குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. Chennai Murder: சிஎஸ்கே தோல்வி கிண்டல்.. இளைஞர் கொல்லப்பட்ட விவகாரத்தில் திடுக் திருப்பம்.. ஷாக் வாக்குமூலம்.! 

அதிகாரிகள் தீவிர விசாரணை:

இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சந்தேகத்திற்கு இடமான வகையில் செயல்பட்டு, கழிவறையை பயன்படுத்தி சென்ற தாய்-மகளின் விபரத்தை சேகரித்தனர். இருவரும் ராஞ்சிக்கு சென்றது உறுதியானதால், அங்குள்ள காவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் தாய் - மகள் கண்டறியப்பட்ட நிலையில், அதிகாரிகளுக்கு அதிர்ச்சி தகவல் காத்திருந்தது. அதாவது, 16 வயது சிறுமியும், அவரின் தாயும் சம்பவத்தன்று மும்பையில் இருந்து ராஞ்சிக்கு சென்றுள்ளனர். 16 வயது சிறுமி 2 நாட்களுக்கு முன்பு கீழே விழுந்ததால், விமான நிலையத்தில் திடீர் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் சிறுமி குழந்தையை பிரசவித்து இருக்கிறார். அதனை குப்பைத்தொட்டியில் போட்டு சென்றுள்ளனர். 16 வயது சிறுமிக்கு பிரசவம் என்பதால், அதிகாரிகள் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி எண்கள்:

சைல்டுலைன் இந்தியா - 1098; பெண்கள் உதவி எண் - 181; தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் - 112; வன்முறைக்கு எதிரான தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் – 78271 70170; போலீஸ் பெண்கள் / மூத்த குடிமக்கள் உதவி எண் - 1091 / 1291; காணாமல் போன குழந்தை மற்றும் பெண்கள் குறித்து புகார் அளிக்க - 1094. ஆன்லைன் வழியாக பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க: https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?3