Baby (Photo Credit: Pixabay)

ஜூன் 15, பால்கர் (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பால்கர் மாவட்டம் ஜோகல்வாடி கிராமத்தில் வசித்து வருபவர் சகாராம் காவர். இவரின் மனைவி அவிதா (வயது 26). தம்பதிகளுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், நிறைமாத கர்ப்பிணியான அவிதாவுக்கு அதிகாலை 3 மணியளவில் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் குடும்பத்தினர் 108 அவசர உதவிக்கு தொடர்பு கொண்டு இருக்கின்றனர். ஆனால் அந்த நேரத்தில் அவசர ஊர்தியினர் இல்லை என கூறப்பட்டுள்ளது. இதன் பின் நீண்ட நேரம் காத்திருந்து காலை 8 மணிக்கு மீண்டும் அவசர உதவிக்கு தொடர்பு கொண்டு உள்ளனர். அப்போதும் வாகனம் வராததால் குடும்பத்தினர் தனியார் வாகனத்தை ஏற்பாடு செய்து அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். மோசமான நிலையில் மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக மோகாடா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். Helicopter Crash: விமான விபத்தை தொடர்ந்து அடுத்த அதிர்ச்சி.. ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி 7 பேர் பலி.! 

அவசர உதவி கிடைக்காததால் சோகம்:

ஆனால் மருத்துவமனையில் இருந்தும் அவசர உறுதி ஏற்பாடு செய்து கொடுக்கப்படவில்லை. அன்றைய நாள் 6 மணி அளவில் மோகாடா ஊரக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கர்ப்பிணியின் வயிற்றிலேயே குழந்தை இறந்துள்ளது. அதனைத் தொடர்ந்து அறுவை சிகிச்சைக்காக நாசிக் மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு குழந்தையை வெளியே எடுத்து மருத்துவர்கள் பெண்ணின் உயிரை மட்டும் காப்பாற்றினார். இதனை தொடர்ந்து குழந்தையின் உடலை அவர்களின் கிராமத்திற்கு எடுத்துச் செல்லவும் அவசர உறுதி ஏற்பாடு செய்து கொடுக்கப்படவில்லை. அவர்களிடம் அதற்கான பணமும் இல்லாததால் குழந்தையின் உடலை பிளாஸ்டிக் பையில் போட்டு 80 கிலோ மீட்டர் தூரம் அரசு பேருந்தில் பயணம் செய்து இறுதி சடங்கு செய்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக தகவல் வெளியாகி தற்போது மனித உரிமை ஆர்வலர்கள் மாநில அரசுக்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர்.