Kotagiri Driver Dies by Electrocution (Photo Credit: Facebook)

ஆகஸ்ட் 16, கோத்தகிரி (Nilgiris News): நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் இருந்து கூட்டடா நகருக்கு தினமும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று இரவில் கூட்டடா நோக்கி பயணித்த த.நா 43 என் 0724 (TN 43 N0724) பதிவெண் கொண்ட அரசு பேருந்து, இரவு பணிமனையில் நிறுத்தப்பட்டு, பின் மீண்டும் இன்று அதிகாலை கோத்தகிரி நோக்கி பயணிகளுடன் புறப்பட்டு இருக்கிறது. பேருந்தை ஓட்டுனர் பிரதாப் இயக்கி இருக்கிறார். Independence Day 2024: "நேதாஜி படை நடத்திய போது கரம் கோர்த்தவர்கள் தமிழ்நாட்டு வீரர்கள்" - சுதந்திர தின விழாவில் பல திட்டங்களை அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..! 

பயணிகளின் உயிரை காப்பாற்றிய ஓட்டுநர்:

பேருந்தில் பயணிகளும் இருந்த நிலையில், கெங்கரை, கோவில்முட்டம் பகுதியில் வந்தபோது உயர் மின்னழுத்த கம்பி ஒன்று தாழ்வாக தொங்கிக்கொண்டு இருந்ததாக தெரியவருகிறது. பனிமூட்டம் காரணமாக இதனை கவனிக்கவும் வழியில்லாத நிலையில், பேருந்து மின்சார கம்பியின் மீது சிக்கி இருக்கிறது. இதனை உணர்ந்த ஓட்டுநர், உடனடியாக பயணிகளை பேருந்தில் இருந்து இறங்க சொல்லியுள்ளார்.

ஓட்டுநர் பரிதாப பலி:

இதனிடையே, பயணிகளின் உயிரை காப்பாற்றிய ஓட்டுநர் பிரதாப், வாகனத்தில் இருந்து இறங்கியபோது மின்சாரம் பாய்ந்து இருக்கிறது. இந்த சம்பவத்தில் பிரதாப் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின் பயணிகள் உதவியுடன் மீட்கப்பட்ட ஓட்டுநர் கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், ஓட்டுநரின் உயிரிழப்பு உறுதி செய்யப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.