Cat Missing (Photo Credit: @SachinGuptaUP X)

ஜனவரி 08, நொய்டா (Noida): உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள நொய்டா, செக்டர் 62 பகுதியைச் சார்ந்தவர் அஜய் குமார். இவர் தனது வீட்டில் செல்லப்பிராணியாக ஷிக்கு (Chekku) என்று பெயரிடப்பட்ட பூனை ஒன்றை வளர்த்து வந்துள்ளார். கடந்த டிசம்பர் 24ஆம் தேதியிலிருந்து பூனை மாயமாகி இருக்கிறது. தான் வசித்து வந்த பகுதியில் பல்வேறு இடங்களில் சுற்றுத் திரிந்து பூனையை தேடியும் கிடைக்கவில்லை.

பாசமிகு பூனைக்காக நெகிழ்ச்சி செயல்: தான் அன்பாக வளர்த்த பூனையின் மீது கொண்ட அதீத அன்பால், பூனையை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என்று முடிவெடுத்த அஜய்குமார் தான் வசித்து வரும் சுற்றுவட்டார பகுதிகளில் பூனையை காணவில்லை என்றும், அதனை கண்டுபிடித்து தருவோருக்கு ரூபாய் ஒரு இலட்சம் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். இது தொடர்பான போஸ்டர் அங்குள்ள பகுதிகளில் ஒட்டப்பட்டு இருக்கிறது. iPhone Survives 16,000 Feet Drop: 16,000 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்த ஐபோன்… ஒரு ஸ்க்ராட்ச் கூட இல்லாமல் பத்திரமாக மீட்பு..! 

பாராட்டுகளை பெற்ற பாசம்: அந்த பதிவில், "பூனையை காணவில்லை. பெயர் ஷிக்கு, ஆண் பூனை. வயது ஒன்றரை வருடம் ஆகிறது. இஞ்சி நிற பூனை, அதன் கழுத்துப் பகுதியில் வெள்ளை நிற முடிகள் இருக்கும். பூனையை நேரில் பார்த்தால் தகவல் தெரிவிக்கவும். பூனையை கண்டுபிடித்து தருவோருக்கு ரூபாய் ஒரு இலட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும்" என தெரிவித்துள்ளார். பூனையின் மீது வைத்துள்ள பாசத்தால், அதனை கண்டறிந்து தருவோருக்கு ரூ. ஒன்றரை இலட்சம் பணம் வழங்குவதாக கூறி உரிமையாளர் மேற்கொண்ட முயற்சி பாராட்டுகளை குவித்து வருகிறது. எனினும் பூனை குறித்த நல்ல செய்தி இன்னும் கிடைக்கவில்லை.