Dog Attack (Photo Credit: @TeluguScribe X)

ஜனவரி 29, ஹைதராபாத் (Hyderabad): தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களால் பல நேரங்களில் மக்களுக்கு துன்பம் நேருவது உண்டு. அவை நம்மை மூர்க்கத்தனம் கொண்டு திடீரென தாக்கும் வல்லமை கொண்டவை ஆகும். வீடுகளில் வளர்க்கும் நாய்கள் நமது சொல்படி நடக்கும் எனினும், அவைகளுக்கும் வெறிவேறிவிட்டால் கட்டுப்படுத்துவது கடினம். ஆகையால், நாய்கள் தெருக்களில் இருந்தாலே சற்று கவனமாக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டள்ளது.

நாய்களால் நடக்கும் துயரங்கள்: அதேபோல, வாகனங்களில் பயணம் செய்வோர், பல இடங்களில் மிதமான வேகத்தில் சென்றாலும் திடீரென குறுக்கே பாயும் நாய்களால் விபத்துகள் நடக்கின்றன. நாய்களுக்குள் நடக்கும் சண்டை, விளையாட்டு என அவைகளின் பிரச்சனையால் சாலையில் செல்வோர் வாகனங்களில் நாய்கள் விழுந்து அவதிப்பட்ட சம்பவங்களும் அதிகம் நடந்து இருக்கின்றன. Gold Smuggling: தங்கம், வெள்ளியை வைத்து மின்சாதன பொருட்கள் உருவாக்கி புதிய கடத்தல் திட்டம்; அதிகாரிகளிடம் சிக்கிய தங்கம்.! 

இளைஞரை தாக்கிய நாய்: இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத், மணிகொண்டா பகுதியில் உள்ள கடையில் இளைஞர் பொருட்களை வாங்கிக்கொண்டு வெளியே வந்த சமயத்தில், அமைதியாக இருந்ததாக தோற்றமளித்த நாய், திடீரென மூர்க்கமாகி அவரை கடுமையாக தாக்கியது.

2 நாட்களில் 4 பேர் பாதிப்பு: இளைஞரும் நாயின் பிடியில் இருந்து விடுபட முயற்சித்தும் பலனில்லை. நாய் அவரின் அந்தரங்க பகுதிக்கு அருகே கடுமையாக தாக்கியது. நல்வாய்ப்பாக பெரிய அளவிலான சேதம் ஏற்படவில்லை. அக்கம் பக்கத்தினர் வந்து நாயை கடுமையாக தாக்கி இளைஞரை மீட்டனர். அப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களில் நான்கு பேர் நாய்களால் தாக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. நாய்களின் செயல்பாடுகளை நகராட்சி அதிகாரிகள் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.