ஜூலை 24, ஹைதராபாத் (Telangana News): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் (Hyderabad), சாந்த்நகர், கிஸிக் காலனி பகுதியில் வசித்து வருபவர் ஆர். வெங்கடேஷ் (வயது 60). இவரின் மனைவி ஆர். மாதவி (வயது 55). வெங்கடேஷ் தொழிலதிபராக இருந்து வருகிறார். தம்பதிகளுக்கு 32 வயதுடைய ஆர். ஹரி கிருஷ்ணா என்ற மகன் இருக்கிறார். இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டின் குளியல் அறையில் மாதவி இருந்தபோது, திடீரென மின்சாரம் தாக்கி இருக்கிறார். இதனால் அவரின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ந்துபோன தந்தை, மகன் இருவரும் மாதவியை காப்பாற்ற சென்றுள்ளனர். அச்சமயம் அவர்களின் உடலில் மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே மயங்கி விழுந்துள்ளனர். Trichy Shocker: கழுத்தை நெரித்த கடன் தொல்லையால் சோகம்; தாய், 2 குழந்தைகள் தூக்கிட்டு தற்கொலை.. கண்ணீரில் குடும்பத்தலைவர்.!
கார்பன் மோனாக்சைடு கசிந்து சோகம்:
மேலும், குளியலறையில் பயன்படுத்தப்பட்டு இருந்த வாட்டர் ஹீட்டரில் இருந்து கார்பன் மோனாக்சைடு (Carbon Monoxide) வாயு கசிந்ததாகவும் தெரியவரும் நிலையில், அவர்கள் அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களின் வீட்டில் சத்தம் கேட்டதை கவனித்து, பக்கத்து வீட்டில் வசிப்போர் வீட்டிற்குள் வந்து பார்த்தபோது இவர்கள் மயங்கி கிடந்தது தெரியவந்தது. இதனையடுத்து, காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், வீட்டின் மின் இணைப்பை துண்டித்துவிட்டு மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், குளியலறையில் மின்சாரம் கசிந்தது மற்றும் கார்பன் மோனாக்சைடு வாயு கசிவு காரணமாக மரணம் நிகழ்ந்தது உறுதி செய்யப்பட்டது.
நிறமற்ற வாயு:
வீடுகளில் வாட்டர் ஹீட்டர் பொருத்தி பயன்படுத்தும் நபர்கள், அதனை அவ்வப்போது பராமரிப்பது நல்லது. அதேபோல, குளியலறை காற்று சற்று வெளியே செல்லும் வகையில் வெண்டிலேட்டர் அமைப்புகள் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறானவை நிறமற்ற வாயுவாக கருதப்படும் கார்பன் மோனைக்ஸைட் மரணங்களில் இருந்து நம்மை பாதுகாக்க உதவி செய்யும்.