ஜூன் 03, தென்காசி (Tenkasi News): தென்காசி மாவட்டத்தில் உள்ள பாவூர்சத்திரம், பனையடிப்பட்டி காளியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் பரமசிவன். இவர் முடி திருத்தம் செய்யும் கடை வைத்துள்ளார். இவரின் மனைவி உமா (வயது 37). தம்பதிகளுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்து இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதனிடையே நேற்று முன்தினம் நேரத்தில் பரமசிவன் டீ குடிக்க வெளியே சென்றுள்ளார்.
பெண்ணின் கழுத்தை அறுத்து கொன்ற மர்மநபர் :
அப்போது மகன்கள் வீட்டின் மொட்டை மாடியில் உறங்கியுள்ளனர். வீட்டில் ஆட்கள் இல்லாததை தெரிந்து கொண்டு திடீரென உள்ளே புகுந்த மர்ம நபர், உமாவின் கழுத்தை அறுத்து கொலை செய்து தப்பிச்சென்றார். இந்த விஷயம் குறித்து பாவூர்சத்திரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் மனைவியின் மரணத்தில் பக்கத்து வீட்டுக்காரர் மீது சந்தேகம் இருப்பதாக பரமசிவம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
பெண்ணிடம் நட்பாக பழகி பின் கொலை செய்த கொடூரம் :
இது தொடர்பான புகாரில், "எனது பக்கத்து வீட்டில் வசித்து வரும் மணிக்குமார் என்ற தோல் வியாபாரியிடம் மனைவி நட்பாக பழகி வந்தார். பின் இருவரும் பழக்கத்தை நிறுத்திக் கொண்டனர். மணிக்குமார் தன்னிடம் பழகுமாறு மனைவியை தொல்லை கொடுத்து மிரட்டி வந்தார். இதனால் போலீசில் புகாரளிப்பேன் என்று கூறியதால், என் மனைவியை அவர் கழுத்தை அறுத்து கொன்றுள்ளார் " என்று தெரிவித்துள்ளார். இதனை அடுத்து காவல்துறையினர் தலைமறைவான மணிக்குமாரை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.