ஜனவரி 03, காட்பாடி (Vellore News): வேலூர் (Vellore) மாவட்டத்தில் உள்ள காட்பாடி (Katpadi), பள்ளிக்குப்பம் பகுதியில் வசித்து வருபவர் பூஞ்சோலை சீனிவாசன் (Poonjolai Srinivasan). இவர் திமுகவில் (DMK) மாவட்ட பொறுப்பில் பதவி வகித்து வருகிறார். இதனிடையே, இன்று காலை சி.ஆர்.பி.எப் பாதுகாப்பு படையினருடன் பூஞ்சோலை சீனிவாசன் வீட்டிற்கு வருகை தந்த அமலாக்கத்துறை (ED Raid) அதிகாரிகள், இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். எல்.பி.ஜி கியாஸ் ஏற்றிவந்த லாரி விபத்து; கோவையில் இங்கு மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை.. விபரம் உள்ளே.!
வருமான வரித்துறையைத் தொடர்ந்து அமலாக்கத்துறை:
கடந்த 2019 ம் ஆண்டு சீனிவாசன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. நாடாளுமன்ற தேர்தலின்போது, திமுக எம்.பி கதிர் ஆனந்துக்கு ஆதரவாக பணம் பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்தது. இந்த விஷயம் குறித்து வருமான வரித்துறை சோதனை நடத்தி ரூ.11 கோடி பணத்தை பூஞ்சோலை சீனிவாசனுக்கு சொந்தமான குடோனில் கைப்பற்றி இருந்தனர். Pudukkottai: சமையல் பணியில் சோகம்.. அரசுப்பள்ளியில் சிலிண்டர் வெடித்து விபத்து..! புதுக்கோட்டையில் பரபரப்பு.!
துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் சோதனை:
இந்நிலையில், தற்போது திமுக மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு துறை பிரிவில் பொறுப்பாளராக இருக்கும் பூஞ்சோலை சீனிவாசனின் வீட்டில், 3 கார்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள், அதிகாலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎப் பாதுகாப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.