Thiruvarur Double Murder Case (Photo Credit: Youtube)

ஆகஸ்ட் 02, திருவாரூர் (Thiruvarur News): திருவாரூர் மாவட்டம் பாண்டுகுடி பகுதியில் வசித்து வருபவர் முகமது ஆதாம். இவர் வேன் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 17 வயது இருக்கும்போது, முகநூலில் அங்குள்ள புலிவலம் கிராமத்தைச் சேர்ந்த 15 வயது பெண்ணின் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களான இருவரும் நட்பாக பேசி பின் காதல் வயப்பட்டுள்ளனர். காதலித்தபோது வேளாங்கண்ணி, திருவாரூர் என பல இடங்களில் சுற்றி வந்துள்ளனர். இதனிடையே, தற்போது 22 வயதாகும் பெண்மணி, பிசியோதெரபி பயின்று பணிக்கும் சேர்ந்துள்ளார். கடந்த வாரம் பணியில் சேர்ந்ததில் இருந்து காதலருடன் பெண் சரிவர பேசவில்லை. Vaiko Meets CM Stalin: தமிழ்நாடு முதல்வருடன் வைகோ திடீர் சந்திப்பு.. பேசியது என்ன? பரபரப்பு பேட்டி.! 

பெண் வீட்டில் தகராறு:

காதலன் முகமது ஆதாம் பெண்ணிடம் இதுகுறித்து கேட்டபோது, பிரேக்கப் செய்யலாம் என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காதலன், காதலித்தபோது இருவரும் ஒன்றாக சுற்றியதன் செலவுக்கு ரூ.1 லட்சத்தை தன்னிடம் கொடுத்துவிட்டால் பிரேக்கப் செய்துகொள்ளலாம் என கூறியுள்ளார். செல்போனில் தொடர்புகொண்ட காதலனின் நம்பரை பெண்மணி பிளாக் செய்துள்ளார். சம்பவத்தன்று தனது காதலியின் வீட்டுக்கு நண்பர்கள் முகமது ரசூலதீன், ஹாஜி முகம்மது ஆகியோருடன் சென்றுள்ளார். அங்கு பெண்ணிடம் தகராறு செய்யப்பட்டுள்ளது. பெண்ணின் சகோதரர் கோபாலகிருஷ்ணன் வீட்டில் இருந்ததால் அவர் வாதம் செய்துள்ளார். Nalam Kakkum Stalin Scheme: நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்.. ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் விளக்கம்.! 

காவல்துறையினர் விசாரணை:

கோபாலகிருஷ்ணன் கொடுத்த தகவலின் பேரில், அவரின் நண்பர்களான நீதிமன்ற ஊழியர் சந்தோஷ் குமார், தச்சு தொழிலாளி தக்ஷிணா மூர்த்தி, தர்மா நேரில் வந்தனர். இவர்களின் வாக்குவாதம் கைகலப்பில் முடிந்தது. இந்த சம்பவத்தின்போது சந்தோஷ் குமார், தட்சிணா மூர்த்தியின் மீது முகமது ஆதாம் கும்பல் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியது. இதில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட ஆதாம் மற்றும் அவரின் நண்பர்கள் 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.