மே 01, பல்லடம் (Tiruppur News Today): திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் சாலை, பூம்புகார் நகர் குடியிருப்பு பகுதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள பகுதி ஆகும். இன்று காலை இப்பகுதியில் உள்ள காலி இடத்தில், பெண் ஒருவரின் சடலம் இருந்தது. இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், நேரில் வந்த பெண்ணின் உடலை பார்வையிட்டனர். அப்போது, அவர் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வரலாம் என சந்தேகிக்கப்பட்டது. வானிலை: இயல்பைவிட வெப்பநிலை அதிகரிக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை..!
பெண் கொடூர கொலை:
அதனைத்தொடர்ந்து, பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். முதற்கட்டமாக பெண்ணின் முகம், கைகள் மீது கல்லைத்தூக்கிப்போட்டு கொலையை அரங்கேற்றியது தெரியவந்தது. இதனால் அவர் யார் என அடையாளம் காணுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. தடயவியல் நிபுணர்கள் நேரில் வரவழைக்கப்பட்டு விசாரணை தொடருகிறது. பெண் காதல் பிரச்சனையில் கொலை செய்யப்பட்டாரா? கற்பழித்து கொல்லப்பட்டாரா? என விசாரணை தொடருகிறது.