Couple Fight / Instagram (Photo Credit : Freepik / Pixabay)

ஜூன் 14, கபூர் (Uttar Pradesh News Today): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கபூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் விஜேந்திரா. இவரின் மனைவியை நிஷா. இவர் இன்ஸ்டாகிராம் (Instagram) கணக்கு வைத்துள்ளார். அதில் அவ்வப்போது வீடியோ பதிவு செய்து வந்துள்ளார். இதனால் பாலோவர்ஸ்களும் அதிகரித்து வந்துள்ளனர். பாலோவர்ஸ் எண்ணிக்கை அதிகரித்த காரணத்தால் அடுத்தது வீடியோ பதிவு செய்து வந்துள்ளார். இதனிடையே, சமீபத்தில் நிஷாவின் கணவர் அதிக வீடு வேலைகளை செய்யச் சொன்னதாக தெரியவருகிறது. இதனால் நிஷாவால் சரிவர வீடியோ பதிவிட முடியவில்லை. ஒருசில நாட்கள் சமாளித்து வீட்டு வேலைகளை கவனித்து வீடியோ பதிவிட்டவர், பின் மீண்டும் வீடியோ எடுக்க இயலாமல் திணறியுள்ளார். இதனால் தனது கணவரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். Viral Video: வீட்டில் இருந்த சைக்கிளை திருடி சென்ற மர்ம நபர்.. வைரலாகும் வீடியோ உள்ளே..!

இன்ஸ்டாகிராம் பாலோவர்ஸ் (Instagram Followers) - கணவர் மீது புகார்:

எந்த நேரமும் செல்போனை பார்த்தபடி மனைவி இன்ஸ்டாகிராமில் மூழ்கி இருப்பதை அறிந்த கணவர், மனைவியை கண்டித்தும் இருக்கிறார். எந்த விதமான முயற்சியிலும் உரிய பலன் கிடைக்கவில்லை. நிஷாவின் குடும்பத்தினருக்கு ஒருகட்டத்தில் விஷயம் தெரியவந்துள்ளது. அவர்களும் நிஷாவை கண்டித்தும் இன்ஸ்டாகிராம் பார்க்கும் பழக்கத்தை கைவிடவில்லை. இதனால் கணவன் - மனைவி இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் கணவரின் மீது வெறுப்படைந்த மனைவி வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். மேலும், அங்குள்ள காவல் நிலையத்தில் தனது கணவருக்கு எதிராக புகார் அளித்துள்ளார். அதாவது, கணவர் தன்னை வீட்டுவேலைகளை செய்யசொல்வதாகவும், இதனால் இன்ஸ்டாகிராம் வீடியோ பதிவிட இயலாமல் 2 பாலோவர்ஸ் குறைந்துவிட்டார்கள் எனவும் கூறியுள்ளார். வினோதமான புகாரை பெற்றுக்கொண்ட அதிகாரிகள், தம்பதிகளுக்கு ஆலோசனை வழங்கியும் இருக்கின்றனர்.

சமூக வலைதளத்தின் தாக்கம் (Social Media Effect):

சமூக வலைத்தளங்களின் அறிமுகத்துக்குப்பின்னர் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி ஸ்மார்ட்போன் பயன்படுத்தி வருகின்றனர். இதில் உள்ள பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உட்பட செயலிகளில் நேரத்தை செலவிடுவதை முழுநேர பணியாகவும் கொண்டுள்ளனர். இதனால் அவர்கள் நேரம் இழக்கப்பட்டு, ஒருசில வருடங்களுக்கு பின்னர் உடல்நலம், மனநலம் என பல ஆரோக்கிய குறைபாடுகளை எதிர்கொள்கின்றனர். தொழில்நுட்பங்களை வளர்ச்சிக்கு பயன்படுத்துவார்கள் தனது பாதையில் பயணத்தை புதுப்பித்து தொடருகின்றனர். ஆனால், அதனை பார்த்து கருத்து சொல்வோர் எப்போதும் கருத்து சொல்பவர்களாகவே இருக்கின்றனர்.