Victim Mukesh Aswathi | Bull File Pic (Photo Credit: @JagranNews X)

மார்ச் 23, காதம்பூர் (Uttar Pradesh News): ஊருக்காக பல உதவிகள் செய்து வாழ்ந்தவர், காளை முட்டி பலியான சோகம் அப்பகுதி மக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அழகிய குடும்பம்: உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காதம்பூர் மாவட்டம், லால்பூர் கிராமத்தை சேர்ந்தவர் முகேஷ் அவஸ்தி (வயது 55). இவர் பாஜக வாக்குச்சாவடி மைய தலைவராக இருக்கிறார். முகேஷின் மனைவி பிரபா. தம்பதிகளுக்கு ஷுபனம், சிவம் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். சிவம் தற்போது நொய்டாவில் கடற்படையில் இணைவதற்கான பயிற்சிகளை எடுத்து வருகிறார். ஷுபனம் வீட்டில் பெற்றோருடன் இருக்கிறார்.

கருணை வள்ளலாக முகேஷ்: அமைதியான குணம் கொண்ட பண்புள்ள நபராகவும், மக்களிடம் நன்மதிப்பை பெற்றவராகவும் இருந்த முகேஷ் சொந்த ஊரில் மருத்துவமனை அமைக்க, அரசுக்கு தனது நிலத்தினை தானமாக கொடுத்து இருக்கிறார். மேலும், ஐந்தாம் வகுப்பு வரை உள்ளூர் மாணவர்களுக்காக பள்ளியையும் நடத்தி வந்துள்ளார். இந்த பள்ளி தற்போது சில காரணங்களால் மூடப்பட்டுள்ள நிலையில், விவசாயத்தில் கவனம் செலுத்தி வந்துள்ளார். Karnataka Shocker: தொழில் நஷ்டத்தை மந்திரத்தில் சரி செய்வதாக மாபிங் செய்து மிரட்டல்; மரக்கடை உரிமையாளர் தற்கொலை விவகாரத்தில் இளைஞர் கைது.! 

Death File Pic (Photo Credit: Pixabay)

திடீரென மூர்க்கமான காளை: இந்நிலையில், நேற்று மதியம் 03:00 மணியளவில் மகேஷ் தனது வீட்டிற்கு வெளியே அமர்ந்து இருந்தார். வீட்டிற்குள் அவரின் மனைவி கணவருக்கு தேநீர் தயார் செய்துகொண்டு இருந்தார். அச்சமயம் காளை (UP Elder Man Died Bull Attack) மாடு ஒன்று வீட்டிற்குள் வந்துள்ளது. அதனை மகேஷ் விரட்டிய நிலையில், ஆவேசமடைந்து திடீர் மூர்க்கமான காளை அவரை முட்டிதூக்கியது. இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த மகேஷ் அஸ்வதி நிகழ்விடத்திலேயே மயங்கினார்.

மரணத்தை உறுதி செய்த மருத்துவர்கள்: அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த குடும்பத்தினர் மற்றும் உள்ளூர் மக்கள் சேர்ந்து, விரைந்து அவரை அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையில் அனுமதி செய்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, உடனடியாக கான்பூரில் உள்ள எல்.எல்.ஆர் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அறிவுறுத்தியுள்ளனர். எல்.எல்.ஆர் மருத்துவமனைக்கு சென்றபோது, மகேஷின் உடலில் இருந்து உயிர் பிரிந்தது உறுதி செய்யப்பட்டது . Moscow ISIS Militants Attack: மாஸ்கோ பயங்கரவாத தாக்குதலில் 60 பேர் துள்ளத்துடிக்க பலி., ரஷ்ய அரசு, மக்களுடன் துணைநிற்போம் - நரேந்திர மோடி.! 

காவல்துறையினர் விசாரணை: மகேஷின் மரணத்திற்கு முதல் நாள் தான் பிதானு, காடுகேரா பகுதியில் தொழிலாளி ஒருவரை மாடு முட்டியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அந்த சம்பவத்தின் வடு மறைவதற்குள் அடுத்த துயரம் நடந்துள்ளது. உ.பியை பொறுத்தமட்டில் மாடுகளால் ஏற்படும் மரணங்களும், மக்கள் பாதிக்கப்படும் அவலமும் தொடர்கதையாகி வருகிறது. இந்த துயரம் குறித்து சாத் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.