நவம்பர் 26, ஜலாலாபாத் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜலாலாபாத் பகுதியில், சம்பவத்தன்று காளை மாடு ஒன்று கட்டுக்கடங்காமல் சுற்றி வந்தது. இந்த காளை அங்குள்ள பகுதிகளில், வீதியில் அமைதியாக நடந்து சென்றோரை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் சம்பவத்தில், 15 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகாயம் அடைந்தனர். Woman Raped By YouTuber: இளம்பெண் பாலியல் பலாத்காரம்.. வீடியோ எடுத்து மிரட்டிய யூடியூபர் கைது..!
மருத்துவமனையில் அனுமதி:
இவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பொதுமக்கள், நகராட்சி மற்றும் கால்நடை அதிகாரிகள் உதவியுடன் அதனை பிடித்து பட்டியில் அடைத்து வைத்தனர். காளை மாடு தாக்குதல் நடத்திய சம்பவத்தின் அதிர்ச்சி காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடவடிக்கை எடுக்க கோரிக்கை:
டெல்லி, குஜராத், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் வீதிகளில் சுற்றித்திரியும் மாடுகள் காரணமாக ஏராளமான பொதுமக்கள் காயம் அடைந்துள்ளனர். சில நேரம் அவை இறப்பு வரையிலும் இட்டுச் செல்கிறது. இதனை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
அதிர்ச்சியூட்டும் காணொளி:
Video: Stray Bull Injures 15 In Uttar Pradesh, Gets Caught After 3 Hour Chase
A bull entered Jalalabad town of Uttar Pradesh, causing a stampede and attacking 15 people pic.twitter.com/EsSjz9hlnP
— Shakeel Yasar Ullah () November 26, 2024