
மார்ச் 17, விரிந்தாவன் (Uttar Pradesh News): இந்தியாவில் 10 க்கும் மேற்பட்ட குரங்கு வகைகள் வாழ்ந்து வந்தாலும், தொன்னை, ரீசஸ் உட்பட சிலவகை குரங்குகள் மக்களால் நன்கு அறியப்பட்டவை ஆகும். இவ்வாறான குரங்குகளை நாம் பெரும்பாலும் வயல்வெளிப்பகுதி, சாலையோர வனப்பகுதிகள், கோவில் வளாகங்கள் ஆகியவற்றில் கண்டு இருப்போம். இந்து மத புராணங்களின்படி, குரங்குகள் இராமாயண புகழ் அனுமாருக்கு இணையாக கவனிக்கப்படுகிறது. ஆதலால், ஒருசிலர் குரங்குகளை நேரில் பார்த்தால் அனுமான் என்று அழைப்பது உண்டு, சிலர் வழிபடவும் செய்வார்கள். இவ்வாறான குரங்குகள் மக்கள் வழங்கும் உணவுகள், கோவில்களில் கிடைக்கும் பிரசாதம், வனங்கள் மற்றும் வயல்வெளிகளில் கிடைக்கும் உணவுகளை தேடி சாப்பிட்டு உயிர்வாழ்கின்றன. Shocking Video: இடுப்பில் சரக்கு, நடையில் மிடுக்கு.. போதையில் மேலாடையின்றி பள்ளி வளாகத்தில் வாக்குவாதம்..!
சாம்சங் செல்போனை தூக்கி ஜூஸ் வாங்கி குடித்த குரங்கு:
பெருநகரங்களில் தப்பிப்பிழைத்து வாழ்ந்து வரும் குரங்குகள், மனிதர்களின் உணவை வாங்கி சாப்பிடுவது, கடைக்காரர் அசந்த நேரத்தில் பழகுவியலை தூக்கிச் சென்று சாப்பிடுவது என இருக்கின்றன. உத்திரபிரதேசம் மாநிலத்தை பொறுத்தவரையில், குரங்குகளின் எண்ணிக்கை ஏராளம். கடந்த 1961 கணக்கெடுப்பின்படி, 10 மில்லியன் குரங்குகள் அங்கு இருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இதனால் அங்குள்ள பல நகரங்களில் குரங்குகள், தங்களின் உணவுகளை பரிணாம வளர்ச்சியால் பல்வேறு முறைகளை கடைபிடித்து தேடி சாப்பிட்டு வருகிறது. ஒருசில நேரம் மனிதர்களின் உடமைகளை தூக்கிச் சென்று, வாழைப்பழம் உட்பட உணவை கொடுக்கும்போது, எடுக்கப்பட்ட உடைமையை மீண்டும் தருகிறது. அவ்வாறான சம்பவம் ஒன்று விருந்தாவன் பகுதியில் அடைந்துள்ளது. விருந்தாவன் பகுதியைச் சேர்ந்த நபரின் சாம்சங் எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போனை எடுத்துச் சென்ற குரங்கு, மாம்பழ ஜூஸ் வாங்கி கொடுத்ததும், அதனை மீண்டும் வழங்கியது. இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மாம்பழ ஜூஸை வாங்கிக்கொண்டு செல்போனை கொடுத்த குரங்கு:
Monkey Steals Samsung S25 Ultra in Vrindavan, Returns It For Mango Drink- #Watch #Monkey #SamsungS25Ultra #Vrindavan #ViralVideo pic.twitter.com/BQxqPtviyt
— TIMES NOW () March 17, 2025
அப்புறம்.. காலத்துக்கேற்ப நாங்களும் மாற வேண்டாமா பாஸ்?. எங்களுக்கும் பசிக்கும்ல...