நவம்பர் 08, நீதிமன்றம் (Chennai News): சென்னையில் உள்ள பட்டினப்பாக்கம் கடற்கரை சாலையில், ஜோடியான சந்திரமோகன் - தனலட்சுமி ஆகியோர், கடந்த அக்.21 அன்று நள்ளிரவில் மதுபோதையில் காவல் அதிகாரிகளை அவதூறாக பேசி இருந்தனர். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த மைலாப்பூர் காவல்துறையினர், துரைப்பாக்கம் பகுதியில் விடுதியில் தங்கியிருந்த இருவரையும் கைது செய்தனர். இவர்கள் கைது நடவடிக்கைக்கு பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். விசாரணையில், இருவரும் திருமணத்தை மீறிய உறவு கொண்ட ஜோடிகள் எனவும் கூறப்பட்டது. சிறையில் அடைக்கப்பட்ட ஜோடி தங்களுக்கு ஜாமின் கேட்டது. Salem Shocker: பீரோ பட்டறை உரிமையாளர் கொடூரமாக வெட்டிக்கொலை; சேலத்தில் பயங்கரம்.!
உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல்:
இந்நிலையில், ஜோடிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இவர்களின் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஜோடி ஜாமின் கேட்டு பதிவு செய்த கோரிக்கை மனு நிராகரிப்பு செய்யப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் ஜோடி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்படவே, இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா அமர்வில் விசாரணைக்கு வந்தது.
நிபந்தனையுடன் ஜாமின்:
அப்போது, காவல்துறை தரப்பில், ஜோடி பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வண்ணம் செயல்பட்டதாகவும், அதிகாரிகளை ஆபாசமாக வசைபாடியதாகவும் வாதிடப்பட்டது. இதனைக்கேட்ட நீதிபதி, இன்னும் எத்தனை நாட்கள் சிறையில் ஜோடியை அடைத்து வைக்கப்போகிறீர்கள்? என கேள்வி எழுப்பி, இருவருக்கும் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். மேலும், மறுஉத்தரவு வரும் வரையில், சந்திரமோகன் மட்டும் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் தினமும் சென்று கையெழுத்திட நிபந்தனை விதித்துள்ளார்.
ஜோடி போதையில் காவலர்களை அவதூறாக பேசிய காணொளி:
Using influence? Do it with humility please 🙏🏽 Lesson learnt here 😂#Chennai couple identified as Chandramohan & Dhanalakshmi arrested for boasting about their connections with Tamilnadu Deputy CM @Udhaystalin. Night rounds police asked them to clear the Marina beach area in… pic.twitter.com/Q8oqpoVcQt
— Nabila Jamal (@nabilajamal_) October 21, 2024