ஜனவரி 26, அருணாச்சல பிரதேசம் (Arunachal Pradesh): இந்தியா தனது 75வது குடியரசு தினத்தினை வெகுவிமர்சையாக சிறப்பித்து வருகிறது. இன்று காலை பல மாநிலங்களில் ஆளுநர்கள் மூவர்ணக்கொடியை ஏற்றிவைத்து, மாநில படைகளின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டனர். மேலும், பலருக்கும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. 75வது குடியரசு தினத்தினை (75th Republic Day India) முன்னிட்டு இந்தியாவெங்கும் கொண்டாட்டங்கள் அதிகரித்து இருக்கும் என்பதால், பல முக்கிய நகரங்களில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இமயமலையில் தொடங்கி, இந்தியாவின் கடைக்கோடி எல்லை குமரி வரையிலும், அதனைத்தாண்டி கடல்கடந்து வசிக்கும் இந்தியர்களாலும் குடியரசு தின கொண்டாட்டங்கள் நடத்தப்படுகின்றன. Kamadhipura Fire Accident: தனியார் ரெஸ்டாரண்டில் பயங்கர தீ விபத்து; கழிவறையில் சிக்கியவர் மூச்சுத்திணறி பலி?..!
இந்தியா - சீனா எல்லை: இந்நிலையில், அருணாச்சல பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தியா - சீனா எல்லையில், இந்தோ-திபெத் எல்லை காவல் (Indo Tibet Border Police) அதிகாரிகள் உறையவைக்கும் குளிரிலும் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டவர் குடியரசு தினத்தினை கொண்டாடி மகிழ்ந்தனர். அருணாச்சல பிரதேசத்தில் உள்ள இந்திய - சீன எல்லையில், தவாங் பகுதியில் பாரத் மாதா கி ஜெ என்ற முழக்கத்துடன் குடியரசு தினம் கொண்டாடப்பட்டது.
#WATCH | 'Himveers' of ITBP posted in snow-bound areas along the India-China border extend their greetings to the countrymen on the 75th Republic Day
(Video source: ITBP) pic.twitter.com/qUtcXhHeDy
— ANI (@ANI) January 26, 2024