நவம்பர் 05, கண்ணூர் (Social Viral): கேரளா மாநிலத்தில் உள்ள கண்ணூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்னதாக நோயாளி ஒருவர் உடல்நலக்குறைவால் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டார்.
அவர் மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிடவே, அவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு நல்லடடக்கம் செய்யப்பட்டது.
சம்பந்தப்பட்ட நபர் மருத்துவமனைக்கு வரும்போது, அவருடன் நாய் ஒன்றும் வந்துள்ளது. உரிமையாளர் உயிரிழந்தது தெரியாமல், அவரை பிணவறைக்கு கொண்டு செல்லும்போது நாய் கவனித்ததாக தெரியவருகிறது. Madurai Lightning: மழைக்காக மரத்தடியில் ஒதுங்கியதால் சோகம்; மின்னல் தாக்கியதில் 2 பேர் பலி., 18 பேர் படுகாயம்.!
இதனால் உள்ளே சென்ற தனது உரிமையாளர் மீண்டும் வருவார் என அந்நாய் பாசத்துடன் பிணவறை வாயிலை எட்டிப்பார்த்தவாறு 4 மாதங்கள் காத்திருந்து வருகிறது.
முதலில் மருத்துவ பணியாளர்கள் நாயை அங்கிருந்து விரட்டிப்பார்த்தும் பலனில்லை. பணியாளர்கள் விரட்டும்போது அங்கிருந்து செல்லும் நாய், மீண்டும் பாவமாக தனது உரிமையாளரை தேடி பிணவறை பக்கமே சுற்றி வருகிறது.
அங்கு வரும் நோயாளிகள் மற்றும் நல்லுள்ளம் கொண்டோர் வழங்கும் உணவை சாப்பிட்டு, உரிமையாளரை தேடி நாய் மருத்துவமனை வளாகத்தையே வட்டமிட்டு வருவது குறித்த தகவல் தற்போது தெரியவந்துள்ளது.