Lightning Attack (Photo Credit: Pixabay)

நவம்பர் 04, கீரனூர் (Madurai News): மதுரை மாவட்டத்தில் உள்ள கீரனூர் பகுதியை சேர்ந்தவர்கள், உறவினர் ஒருவரின் இறுதி சடங்கு கலந்து கொள்ள புறப்பட்டு சென்றுள்ளனர்.

அச்சமயம் மழை பெய்த நிலையில், வாகனம் நடுவழியில் நிறுத்தப்பட்டு அனைவரும் மரத்தின் கீழே ஒதுங்கி இருக்கின்றனர். அப்போது, எதிர்பாராத விதமாக மழையின் காரணமாக மின்னல் தாக்குதல் நடந்துள்ளது.

இதனால் மரத்தின் கீழே இருந்த 25 வயதுடைய இளைஞர் அக்னி ராஜா, மற்றும் 23 வயதுடைய இளைஞர் செல்வா ஆகியோர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். Nepal Earthquake Death toll: நேபாளம் நாட்டில் அதிபயங்கர நிலநடுக்கம்; கிடுகிடுவென உயரும் பலி எண்ணிக்கை.!

மேலும், 18 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு அனைவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில், அக்னி ராஜா மற்றும் செல்வா ஆகியோரின் உயிரிழப்பு உறுதி செய்யப்பட்டது. மழை நேரத்தில் மரங்களுக்கு கீழே எக்காரணம் கொண்டும் ஒதுங்க கூடாது என்பது விழிப்புணர்வாக பலமுறைக்கு மக்களுக்கு கூறப்பட்ட நிலையில், கூட்டமாக சேர்ந்து அலட்சியத்துடன் செயல்பட்டு இரண்டு உயிர் பலியான சோகம் நடந்துள்ளது.