Exam File Pic | Girl Student Request Letter (Photo Credit: @indiatimes X)

மார்ச் 12, ஜபல்பூர் (Madhya Pradesh News): இந்திய அளவில் தற்போது 12 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு பொதுத்தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதனைத்தொடர்ந்து, இந்திய ஆட்சிக்கான பொதுத்தேர்தலும் நடைபெறவுள்ளது. மாணவர்கள் தங்களின் எதிர்காலத்தை தேர்வு செய்யும் கட்டத்தில் இருப்பதால், பல விஷயங்களை தியாகம் செய்து இறுதி நாட்களில் விறுவிறுப்புடன் படித்து தேர்வெழுதி வருகின்றனர். அதேபோல, ஒருசில இடங்களில் பெற்றோரின் வற்புறுத்தல், திருமணத்தை தவிர்த்தல் உட்பட பல விஷயங்களுக்கும் இன்றளவில் கல்வி என்பது மிகப்பெரிய ஆயுதமாக மாறி இருக்கிறது. அதனை உறுதி செய்யும் வகையில் தேர்வில் மாணவி ஒருவர் எழுதி வைத்த கோரிக்கை குறித்த சம்பவம் தெரியவந்துள்ளது.

மாணவியின் கோரிக்கை கடிதம்: மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜபல்பூர் பகுதியை சேர்ந்த பெண் மாணவி ஒருவர், பள்ளியில் நடைபெற்ற தேர்வு ஒன்றில் தேர்ச்சியடைய வேண்டி ஆசிரியரிடம் கோரிக்கை வைத்துள்ளார். அந்த கோரிக்கையில், நான் தேர்வில் தோல்வியுற்றால் பெற்றோர்கள் திருமணத்திற்கு கட்டாயப்படுத்துவார்கள் என்பதால், என்னை எப்படியாவது தேர்ச்சியடைய வையுங்கள் என்று கூறி இருக்கிறார். Truck Rammed into Wedding Procession: திருமண ஊர்வலத்தில் புகுந்த லாரி.. 6 பேர் பரிதாப பலி., 10 பேர் படுகாயம்.! 

வைரலாகிய ஆசிரியரின் பதிவு: இந்த கோரிக்கையை கண்ட ஆசிரியர், தனது செல்போனில் அதனை புகைப்படமாக எடுத்த பதிவு செய்துள்ளார். இப்பதிவு தற்போது வைரலாகி வருகிறது. இந்தியாவை பொறுத்தமட்டில் கடந்த காலங்களில் அதிகம் நடைபெற்று வந்த குழந்தை திருமணங்கள் வெகுவாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, மகளிருக்கான பல சிறப்பு திட்டங்களினால் அவர்கள் பல உயரங்களை அடைந்து வருகின்றனர். இதனிடையே, தற்போது மாணவி ஒருவர் தான் தேர்வில் தோல்வியுற்றால் பெற்றோர் தன்னை திருமணம் செய்து கொடுத்துவிடுவார்கள், அதை தவிர்க்க என்னை தேர்ச்சி அடைய செய்யுங்கள் என எழுதி கோரிக்கை வைத்துள்ள சம்பவம் நடந்துள்ளது.