Visual Taken from Video (Photo Credit: X)

நவம்பர் 17, ரத்லம் (Social Viral): மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள 230 தொகுதிகளில், இன்று ஒரேகட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதனால் அம்மாநிலத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 230 தொகுதிகளில் 2500 வேட்பாளர்கள் மொத்தமாக களம்காண்கின்றனர். 5 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் தங்களின் வாக்குகளை பதிவு செய்கின்றனர். இதில், 2.9 கோடி ஆண் வாக்காளர்களும், 2.7 கோடி பெண் வாக்காளர்களும் இடம்பெற்றுள்ளனர். iQOO 12 5G Alpha Edition: iQOO செல்போன் பிரியர்களுக்கு உற்சாக செய்தி: iQOO 12 5G ஆல்பா எடிசன் ஸ்மார்ட்போன் டிச.12 முதல் விற்பனை.! விபரம் இதோ.! 

இந்நிலையில், அம்மாநிலத்தில் உள்ள ரத்லம் தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பரசு சலேச்சா, தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளும்போது வயோதிகர் சாலையோரம் அமர்ந்து இருந்தார். அவருக்கு காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் செருப்பு வாங்கிக்கொடுத்த நிலையில், செருப்பை வாங்கிய முதியவரோ வேட்பாளரை செருப்பால் அடித்தார். அவர் ஆசி செய்வதுபோல பாவனை செய்த காங்கிரஸ் வேட்பாளர், தன்னை மேலும் செருப்பால் அடிக்கூறி முகத்தை காண்பித்தார்.

உள்ளூர் மக்களால் பாபா என அழைக்கப்படும் வயோதிகரின் கைகளால் செருப்படி வாங்கிய வீடியோ, அங்கு வாக்குப்பதிவு நடைபெறும் இன்று திடீர் வைரலாகி இருக்கிறது. இது வாக்கை மடைமாற்றம் செயலாகவும் பார்க்கப்படுகிறது. எது எப்படியோ, பாபா செருப்பால் அடித்துவிட்டார் எனில் மக்கள் வாக்கு செலுத்திடுவார்களா என்ன?. அதற்கு தேர்தல் முடிவுகளே பதில் சொல்லும்.