ஏப்ரல் 28, ஜகர்தா (World News): ஜப்பான், தைவான் (Japan Earthquake) போன்ற நாடுகளில் கடந்த சில நாட்களாகவே 6 புள்ளிகளை கடந்த நிலநடுக்கம் தொடர்ந்து குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் ஏற்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கூட, தைவானில் (Taiwan Earthquake) ஒரேநாளில் 200 க்கும் அதிகமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டு இருந்தன. இதனால் பெரிய அளவிலான சேதங்கள் ஏற்படவில்லை எனினும், அவ்வாறான சேதங்களை தரும் நிலநடுக்கத்திற்கான அறிகுறியாக இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

லேசான கடல் அலை உயர்வு: இந்நிலையில், நேற்று இரவு இந்தோனேஷியா (Indonesia Earthquake) நாட்டில் உள்ள மேற்கு ஜாவாவை ஒட்டியுள்ள கடற்கரை பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 6.5 புள்ளிகள் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மேற்கு ஐநாவில் இருந்து தென்மேற்கு திசையில் உள்ள கடலில், 151 கி.மீ தொலைவில், 10 கி.மீ ஆழத்தில் இரவு 11:29 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என அந்நாட்டு நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதனால் கடற்கரையோரங்களில் அலைகள் சில அடிகள் உயரவும் செய்தன. ஆனால், கடற்கரையோரத்தை அலைகள் தாண்டவில்லை. mRNA Skin Cancer Vaccine: தோல் புற்றுநோய்க்கான தடுப்பூசி சோதனையின் மூன்றாவது கட்டம் தொடக்கம்; விரைவில் உலகுக்கே நல்லசெய்தி.! 

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்: இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகர்தாவுக்கு அருகே செல்லும் நிலநடுக்கோடு பகுதியில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம், அங்குள்ள பன்டென், மத்திய ஜாவா, யோகியாகர்த்தா, கிழக்கு ஜாவா ஆகிய பகுதிகளிலும் எதிரொலித்து இருக்கிறது. மேற்கு ஜாவாவில் உள்ள சுகபூமி, தாசிகமலயா, பாண்டுங் ஆகிய நகரங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டு இருக்கின்றன. பசுபிக் நெருப்பு வளையத்தின் மோதிரம் (Pacific Ring of Fire) என்று வருணிக்கப்பட்டும் இடத்தில் அமைந்துள்ள இந்தோனேஷியா நாடு, அதன் இயற்கை புவியியல் அமைப்பால் அதுசார்ந்த பிரச்சனைகளையும் எதிர்கொள்கிறது.

பசுபிக் நெருப்பு வளையம் பற்றி சுருக்கமாக: உலகத்தில் மிகப்பெரிய பசுபிக் பெருங்கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள நாடுகளை ஒருங்கே அமைத்து, இயற்கை தனது நெருப்புக்கோடுகளை பூமிக்கடியில் மறைத்து வைத்துள்ளது. இந்த நெருப்பு வளையம் வெளிப்படையாக தெரியும் இடங்களில் எரிமலைகள் வெடித்து சிதறுகின்றன. ஆழ்கடலில் இருக்கும் நெருப்பு வளையம் படிப்படியாக காலப்போக்கில் மலைகளாகவும், தீவுகளாகவும், நாடுகளாகவும் உருவானாலும் மனிதர்களின் செயல்பாடுகள் அவற்றை தட்டியெழுப்பி இயற்கையின் செயல்பாடுகளை மீண்டும் செவ்வனே செய்ய வைக்கிறது.

ஜப்பானில் மிகப்பெரிய நிலநடுக்கத்திற்கு வாய்ப்பு: பசுபிக் வளையத்தில் இந்தோனேஷியா, அமெரிக்கா கண்டத்தின் மேற்கு பக்கம், ஆஸ்திரேலியாவை ஒட்டியுள்ள கடலோரம் நேரடியாக பாதிக்கும் தூரத்தில் இருக்கின்றன. இந்தோனேஷியா போல ஜப்பானும் ஆபத்தான நிலநடுக்கம் ஏற்படும் நெருப்பு வளையத்தின் மீது அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போதுள்ள கணிப்புகளின்படி வரும் ஒரு வாரத்திற்குள் ஜப்பான் நாட்டில் மிகப்பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்படலாம் என்று தெரியவந்துள்ளது.

பசுபிக் வளையத்தில் இந்தோனேஷியா பகுதிகள்: