Prize Money for ICC Men's World Cup 2023 (Photo Credit: @ICC Twitter)

செப்டம்பர் 20 , புதுடெல்லி (Cricket News): ஐசிசி ஆடவர் உலகக்கோப்பை கிரிக்கெட் (ICC Cricket World Cup 2023) தொடர் அக்டோபர் மாதம் 05ம் தேதி முதல் நவம்பர் மாதம் 19ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த போட்டிகளை நடப்பாண்டில் இந்தியா (India Host ICC Men's World Cup 2023) ஒருங்கிணைத்து தனிநாடாக நடத்துவதால், இந்தியாவில் இருக்கும் பல்வேறு மைதானங்கள் விழாக்கோலமாகவுள்ளது.

இந்தியா உலகக்கோப்பையை தனியாக நடத்துவது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. முதல் மற்றும் இறுதி போட்டிகள் குஜராத் (Gujarat) மாநிலத்தில் உள்ள அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் (Narendra Modi Stadium) வைத்து நடைபெறுகின்றன. அரையிறுதி தகுதிப்போட்டிகள் மும்பையில் உள்ள வான்கடே (Wankhede Stadium) மைதானம், கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. Tesla Optimus AI Robot: மனிதர்களை போல தோற்றம்.. டெஸ்லாவின் ரோபோட்டை நமஸ்தே சொல்லி உலகுக்கு அறிமுகம் செய்து வைத்த எலான் மஸ்க்.!

ரோஹித் சர்மா (Rohit Sharma) வழிநடத்தும் இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா, ஷுப்மான் கில், விராட் கோலி (Virat Kohli), ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா (Ravendra Jadeja), ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், முகமது ஷமி, அக்சர் படேல், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadhav) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

உலகக்கோப்பை 2023ல் கலந்துகொள்ளும் அணிகளுக்காக அமெரிக்கா மதிப்பில் 10 மில்லியன் டாலர் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த 10 மில்லியன் டாலரில், இறுதியில் வெற்றியடையும் அணிக்கு 4 மில்லியன் டாலர் பரிசாக வழங்கப்படும். ரன்னர் அணிக்கு 2 மில்லியன் டாலர் வழங்கப்படும். அரையிறுதியில் தோல்வியுறும் அணிகளுக்கு 8 இலட்சம் டாலர் வழங்கப்படும். வெற்றியையும் ஒவ்வொரு போட்டிக்கும் 40 ஆயிரம் டாலர், அரையிறுதிக்கே தகுதி பெறாமல் வெளியேறும் அணிக்கு 1 இலட்சம் டாலரும் பரிசாக வழங்கப்படும். Bull Attack Death: விழா ஏற்பாட்டாளரை முட்டித்தூக்கி கொன்ற காளை; பதைபதைப்பு சம்பவம்.!

கடந்த ஜூலை 2023ல் தென்னாப்பிரிக்காவில் இருக்கும் டர்பன் நகரில் நடைபெற்ற ஐசிசி வருடாந்திர உச்சி மாநாட்டில், ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் அணியைப்போல, பெண்களின் அணிக்கும் சமமான தொகை வழங்க முடிவெடுக்கப்பட்டதை தொடர்ந்து, ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பை 2025ல் இதே தொகை பரிசாக அறிவிக்கப்படும். 13வது கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் 48 போட்டிகள், 10 வெவ்வேறு மைதானங்களில் விறுவிறுப்பாக நடைபெறவுள்ளது. 46 நாட்கள் இந்தியாவுக்குள் இருக்கும் வெவ்வேறு மைதானங்களில் நடைபெறும் போட்டியை காண பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

உலகக்கோப்பை தகுதிச்சுற்றில் நியூசிலாந்து, ஸ்ரீலங்கா அணிகள் தோல்வியுற்றன என்பது குறிப்பிடத்தக்கது. இறுதி போட்டியின் பின்னரே வெற்றிவாகை சூடும் நாட்டின் அணி பரிசுத்தொகையை அள்ளிச்செல்லலும்.