செப்டம்பர் 28, நாமக்கல் (Namakkal News): கேரளா மாநிலத்தில் உள்ள திருச்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்த 3 எஸ்.பி.ஐ வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையங்கள் கேஸ் வெல்டர் கொண்டு திறக்கப்பட்டு, அதில் இருந்த ரூ.67 இலட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. வெள்ளை நிற காரில் வந்த கும்பல், அதிகாலை 3 - 4 மணிக்குள் அடுத்தடுத்து 3 ஏடிஎம் மையங்களில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நிலையில், காரை கண்டைனர் லாரிக்குள் ஏற்றி தப்பிச்சென்றது. இந்த விஷயம் குறித்து கேரள காவல்துறையினர் பிற மாவட்ட காவல் நிலையங்களுக்கும், தமிழ்நாடு காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். இந்த கும்பல் நாமக்கல் மாவட்ட காவல் துறையினரால், குமாரபாளையம், வெப்படை பகுதியில் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டது.
குற்றவாளிகள் சுட்டுப்பிடிப்பு:
மொத்தமாக கைது செய்யப்பட்ட 6 பேரில், ஓட்டுநர் நிகழ்விடத்திலேயே என்கவுண்டர் செய்யப்பட்டதில் உயிரிழந்தார். மற்றொருவர் காயத்துடன் மீட்கப்பட்டு, தற்போது கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எஞ்சிய 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். பொதுமக்கள், காவல் துறையினர் சேர்த்து இக்கும்பலை அதிரடியாக கைது செய்துள்ளனர். விசாரணையில், இவர்கள் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த கொள்ளை கும்பல் என்பதும், சென்னையில் வந்து தங்கியிருந்து பின் கேரளாவில் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியதும் தெரியவந்தது. Gingee Fort: உலகளவில் கவனம்பெறப்போகும் செஞ்சிக்கோட்டைக்கு விரைவில் யுனெஸ்கோ அங்கீகாரம்; அமைச்சர் உறுதி; மக்கள் மகிழ்ச்சி..!
தென்னிந்திய மாநிலங்கள் டார்கெட்:
இதனால் கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடக மாநில காவல்துறையினரும், கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறைனரும், நாமக்கல் மாவட்டம் வெப்படை காவல் நிலையத்திற்கு வந்து கொள்ளை கும்பலிடம் விசாரித்து வருகின்றனர். மேற்கூறிய கொள்ளை கும்பலில் 6 பேர் மட்டுமே சிக்கியுள்ள நிலையில், அவர்களின் கூட்டாளிகளாக இருக்கும் பிற நபர்களை தேடியும் வலை வீசப்பட்டுள்ளது. பணப்புழக்கம் அதிகம் இருக்கும் தென்னிந்திய மாநிலங்களை குறிவைத்து மோசடி செயலில் ஈடுபட்டு வந்த கும்பல், கேரளாவில் கைவரிசை காண்பித்துவிட்டு பாலக்காடு வழியாக தமிழகம் வந்து, பின் தப்பிச்செல்ல முயன்ற போது கைது செய்யப்பட்டுள்ளது.
4 பிரிவுகளில் வழக்குப்பதிவு:
கைதான நபர்களில் ஜூமான் என்பவர் மட்டும் என்கவுண்டரில் உயிரிழந்தார். மொத்தமாக 6 பேரின் மீது விபத்தை ஏற்படுத்துதல், காவலர்கள் மீது தாக்குதல் நடத்துதல், அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல், அரசு & தனியார் சொத்துக்களுக்கு சேதம், கொலை முயற்சி உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ், கைதான ஆறு பேர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ஏடிஎம் கொள்ளை வழக்கு திருசூரில் நிலுவையில் இருந்தாலும், நாமக்கல் காவல்துறையினர் கூடுதலாக 4 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இந்த கும்பல் தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கும் இக்கும்பல் கொள்ளையில் ஈடுபட்டுள்ளதா? என்ற விபரங்கள் சேகரிக்கப்படுகிறது. ஹரியானா மாநில காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, குற்றவாளிகளின் உண்மையான அடையாளம் மற்றும் பின்னணியை சேகரிக்க உத்தரவிட்டுள்ளது.
கொள்ளையில் ஈடுபட்டு கண்டைனர் லாரியில் தப்பிச்சென்றோரை பொதுமக்கள் & காவல்துறையினர் துரத்திச் சென்ற காணொளி:
CCTV footage of Namakkal police in their bikes and jeeps chasing the container truck, in which the ATM robbery gang attempted to flee.
The gang is from Haryana, not Rajasthan.@xpresstn @NewIndianXpressa pic.twitter.com/frMaqtnHh4
— S Mannar Mannan () September 27, 2024