செப்டம்பர் 09, இந்தியா (Social Viral): வடக்கு ஆப்ரிக்காவில் உள்ள மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பிடியில் சிக்கி தற்போது வரை 632-க்கும் அதிகமானோர் உயிரிழந்து இருக்கின்றனர். மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், முக்கிய நகரங்களில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் தரைமட்டமானதால், பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது. 400 க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு துருக்கியில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தில் சிக்கி 50,783 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். துருக்கி நிலநடுக்கத்தை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் பகுதிகளை மையமாக வைத்து மிகப்பெரிய நிலநடுக்கம் எதிர்காலத்தில் ஏற்படலாம் வேண்டும் கணிக்கப்பட்டுள்ளது. Holy Basil Benefits: மூலிகைகளின் ராணியாக வர்ணிக்கப்படும் துளசி: காரணம் என்ன?.. தலைமுறைக்கே உதவும் அசத்தல் டிப்ஸ் உள்ளே.!
அதனை உறுதி செய்யும்பொருட்டு அவ்வப்போது சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. 2004 சுனாமிக்கு காரணமாக அமைந்த இந்தோனேஷியா பகுதிகளிலும் அவ்வப்போது நிலநடுக்கம் உணரப்படுகிறது.
இந்நிலையில், திரிபுரா மாநிலத்தில் உள்ள தர்மன் நகர் மாவட்டத்தில், வடகிழக்கு திசையில் 72 கி.மீ தூரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளது. இதனை தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் உறுதி செய்திருக்கிறது.
இதனால் பெரிய அளவிலான சேதங்கள் ஏற்பட்டதாக தகவல் ஏதும் தற்போது வரை இல்லை.