Pune Lift Collapse Visual (Photo Credit: Twitter)

ஜூலை 31, புனே (Pune): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே, ஹின்ஜெவாடி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் பவ்தன் என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. சுமார். 12 தளங்களை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் பலரும் வசித்து வருகின்றனர்.

இங்குள்ள குடியிருப்பு வளாகத்தில் 10வது மாடியில் வசித்து வருபவர் பரத் சௌதாரி (வயது 42). இவர் தனது மனைவி, மகன், மகள் ஆகியோருடன் வசித்து வருகின்றார். சம்பவத்தன்று இவரின் மனைவி மற்றும் 11 வயது மகன் ஆகியோர் வீட்டின் கீழ் தளத்திற்கு சென்றுவிட்டு, மீண்டும் 10வது தளத்திற்கு வருகை தந்துள்ளனர். Delhi High Court: பசுவதைக்கு தடை விதிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட இயலாது – டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு.!

இருவரும் மின்தூக்கி (Lift) உதவியுடன் மேலே வந்த நிலையில், இருவரும் தங்களது தளத்தில் இறங்கி சென்ற சில வினாடிகளில் மின்தூக்கியின் கயிறு அறுபட்டு மேலிருந்து கீழே விழுந்து பயங்கர விபத்து ஏற்பட்டது. நல்வாய்ப்பாக மின்தூக்கியில் ஆட்கள் இல்லாததால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

இந்த விஷயம் தொடர்பான வீடியோ அங்கிருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியிருந்த நிலையில், பரத் இந்நிகழ்வு தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் அதிகாரிகள் மின்தூக்கியை பராமரித்து வரும் நிறுவனம், கட்டுமான பணியை மேற்கொண்ட நிறுவனத்திற்கு வழக்குப்பதிவு செய்து சம்மன் வழங்கி இருக்கின்றனர்.