அக்டோபர் 08, சென்னை (Chennai News): சென்னை போரூரில் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்த உச்சநீதிமன்றம் அவரை விடுதலை செய்த பரபரப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. போரூரில் கடந்த 2017 ஆம் ஆண்டு 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தஷ்வந்த் கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து ஜாமினில் வெளியே வந்த தஷ்வந்த் அவரது தாயாரை கொலை செய்ததாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
குற்றவாளி தஷ்வந்தை விடுதலை செய்த உச்சநீதிமன்றம் :
சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றமும் மரண தண்டனையை உறுதி செய்தது. இதனிடையே கருணை அடிப்படையில் வழக்கை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தஷ்வந்த் மேல்முறையீடு செய்த நிலையில், இன்று வழக்கை விசாரித்த நீதிபதி விக்ரம்நாத் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தஷ்வந்த் குற்றவாளி என நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை எனக்கூறி மரண தண்டனையை ரத்து செய்தது. Gold Rate Today: காலையிலேயே ஷாக்.. ரூ.90,000ஐ கடந்தது தங்கம் விலை.. நகைப்பிரியர்களுக்கு பேரிடி.!
உச்சநீதிமன்றம் சொன்ன காரணம் :
இதனைத் தொடர்ந்து சிசிடிவி காட்சிகளில் இருப்பது தஷ்வந்த் என்பது உறுதி செய்யப்படவில்லை என்றும், குற்றம் நடந்த இடத்தில் சேகரிக்கப்பட்ட டிஎன்ஏ தஷ்வந்தின் டிஎன்ஏவுடன் ஒத்துப் போகவில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்து தஷ்வந்தை விடுதலை செய்துள்ளனர். இந்த தீர்ப்பு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.