Tennessee Cute Bear Activity (Photo Credit: Twitter)

ஜூலை 20 , டென்னிஸி (Trending Video): மலைப்பிரதேசங்களில் வனவிலங்குகளின் நடமாட்டம் என்பது இயல்பான ஒன்று. அவ்வப்போது உணவு தேடி அவை வீடுகளுக்குள் நுழைந்து தனக்கு தேவையான உணவை எடுத்துச் செல்லும்.

நமது ஊர்களில் நிலைமை வேறு என்றாலும், சில நாடுகளில் வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்டு மக்கள் அச்சப்படாத சூழலும் இருக்கின்றன. வனப்பகுதியில் வீடு கட்டி இருக்கும் மக்கள், அவற்றின் வருகையின் போது வீடுகளுக்குள் தஞ்சம் புகுந்துகொள்வார்கள். WhatsApp Down: சிலமணிநேரம் இயங்காமல் முடங்கிய வாட்சப்; பயனர்கள் அவதி.. நிலைமை சரி செய்யப்பட்டதாக அறிவிப்பு.!

இதனால் வனவிலங்குகள் எவ்வித அச்சமும் இன்றி பாதுகாப்பாக வந்து செல்கின்றன. பின் வனத்துறைக்கு அதிகாரிகள் அதற்கான நடவடிக்கை எடுப்பார்கள். இந்த நிலையில், அமெரிக்காவில் உள்ள டென்னிஸி மாகாணம், Pigeon Forge பகுதியில் குடியிருப்பு பகுதி உள்ளது.

அங்கு உணவு தேடி வந்த கரடி, தனது 3 குட்டிகளுடன் உலாவி வந்தது. அங்குள்ள வீட்டு வாசல் முன்பு நின்று கொண்டிருந்த நிலையில், அந்த மூன்று குட்டியில் ஒரு குட்டி மனிதர்களைப் போல எழுந்து நடந்து வீட்டில் இருந்த சிறார்களை வியப்படைய வைத்தது.