Victim Sukesh | Accuse Karthick, Selvam (Photo Credit: Facebook)

நவம்பர் 15, திருப்பத்தூர் (Tirupattur News): திருமணமே செய்ய இயலாத வயதில் ஏற்பட்ட காதலில் உண்டான தகராறு, அப்பாவியின் உயிரை பறித்த பயங்கரத்தை பதைப்பு பின்னணி குறித்து விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.

திருப்பத்தூர் (Tirupattur) மாவட்டத்தில் உள்ள அனுமந்த உபாஸ் நகரில் வசித்து வருபவர்கள் சுகேஷ் மற்றும் கார்த்திக். இருவருக்கும் 19 வயதாகும் நிலையில், சுகேஷ் அப்பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து வந்தாக தெரியவருகிறது.

கார்த்திக், அதே சிறுமியை ஒருதலையாக காதலிக்க, ஒரே பகுதியை சேர்ந்த நண்பர்களுக்குள் யாருக்கு அந்த சிறுமி? என்ற பிரச்சனை ஏற்பட்டுள்ளது. மேலும், சிறுமியோ சுகேஷை காதலித்து வந்தார்.

இதுதொடர்பாக இருவருக்கும் இடையே சம்பவத்தன்று நடந்த வாக்குவாதத்தில், சுகேஷ் மற்றும் கார்த்திக் நடுரோட்டில் சண்டையிட்டுள்ளனர். இருவரையும் அக்கம் பக்கத்தினர் பிரித்து வைத்து அனுப்பி இருக்கின்றனர்.

இந்நிலையில், அடிவாங்கிய கார்த்திக் ஆத்திரத்தில் இருந்த நிலையில், அவரின் தந்தை செல்வத்திடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமுற்ற செல்வம், மகன் கார்த்திக், தனது மளிகைக்கடையில் வேலை பார்த்து வந்த பாலாஜி, தருமன் என ஐவராக சுகேஷை தேடி சென்றுள்ளனர். SETC Bus Service for Sabarimala: ஐயப்ப பக்தர்களுக்கு உற்சாக செய்தி: இனி அதிக செலவு கிடையாது.. பம்பைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் விரைவு பேருந்துகள்.. சொகுசு பயணம்.. விபரம் இதோ.! 

சுகேஷிடம் சம்பவம் குறித்து பேசிக்கொண்டு இருந்தபோது எழுந்த வாக்குவாதத்தில், கிரிக்கெட் போட்டால் கடுமையாக தாக்கப்பட்டார். செல்வம், கார்த்திக், அவருடன் வந்தவர்கள் சுகேஷை தாக்கி இருக்கின்றனர்.

இதனால் பலத்த காயமடைந்த சுகேஷ் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் மேல் சிகிச்சைக்காக பெங்களூர் அழைத்து செல்லப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரின் மறைவுக்கு பின், உறவினர்களிடம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உடல் ஒப்படைக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. நண்பனின் மறைவை அறிந்த சுகேஷின் நண்பர்கள், திருப்பத்தூர் சாலையில் திடீர் சாலை மரியாளுக்கு முற்பட்டதால் பரபரப்பும் ஏற்பட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பதற்ற சூழல் உண்டானதால், அப்பகுதியில் இருந்த கடைகளும் மூடப்பட்டன. களத்தில் இறங்கிய காவல் துறையினர் பலத்த பாதுகாப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, சுகேஷின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இது தொடர்பாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், காவல் துறையினர் கார்த்திக், அவரின் தந்தை செல்வம், செல்வத்தின் மளிகைக்கடையில் வேலைபார்த்து வந்த பாலாஜி, தருமன் உட்பட 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.