JK Article 370 Case | Supreme Court Chief Judge Panel (Photo Credit: @ANI X)

டிசம்பர் 11, புதுடெல்லி (New Delhi): ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து 370வது பிரிவு, மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில அரசியல் கட்சியான மக்கள் ஜனநாயக கட்சி தனது கண்டனத்தை தெரிவித்தது. மேலும், அதன் தலைவர் போராட்டங்களையும் முன்னெடுத்திருந்தார்.

சிறப்புப்பிரிவு ரத்துக்கு எதிர்ப்பு: 370 சிறப்புப்பிரிவு இரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்திலும் மனுதாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இன்று வழக்கு விசாரணை அனைத்தும் நிறைவு பெற்று இறுதி தீர்ப்பு வாசிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். அதன்படி, தீர்ப்பு வெளியாவதை முன்னிட்டு, ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முக்தி வீட்டில் சிறை வைக்கப்பட்டு அடைத்து வைக்கப்பட்டார்.

Mehbooba Mufti House (Photo Credit: @jkpdp X)

வீட்டுச்சிறையில் மெகபூபா: அவரின் வீடு மட்டுமல்லாது, அவரது கட்சியின் முக்கியப்புள்ளிகள் வீடு, அலுவலகங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவிப்பின்படி, சட்டப்பிரிவு 370 இரத்து செய்யப்பட்டது தொடர்பான விசாரணையில் மூன்று விதமான தீர்ப்புகள் இருக்கின்றன. சட்டப்பிரிவு 370வது பிரிவு என்பது தற்காலிகமானது, அது நிரந்தரமானது கிடையாது. குடியரசுத் தலைவரின் நேரடி அதிகாரத்தின் கீழ் ஆட்சி பெற்று வரும் மாநிலத்தில், மத்திய அரசு எடுத்த முடிவுகளை எதிர்த்து வழக்கு தொடர இயலாது. Trans Gender Man Marriage: பாலின அறுவை சிகிச்சைக்கு பின் காதலியை கரம்பிடித்த இளைஞர்: சிறப்பு திருமணச்சட்டத்தின் கீழ் அங்கீகாரம்.! 

நீதிபதிகள் தீர்ப்பு: ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஒன்று மற்றும் 370 வது பிரிவுகளின் படி உறுதியாகிறது. சட்டப்பிரிவு 370 ஜம்மு காஷ்மீரை அரசியலமைப்பு ரீதியாக ஒன்றிணைப்பதற்காக மட்டுமே தவிர்த்து, அது பிரிப்பதற்கு ஆனது இல்லை. இதனை குடியரசுத் தலைவர் அறிவிப்பாக வெளியிடலாம். அரசியலமைப்பின் அனைத்து சட்ட விதிகளும் ஜம்மு காஷ்மீர் 370 (1) டி-க்கு பயன்படுத்தலாம். இந்த பிரிவின்படி அனைத்து விதிகளை பயன்படுத்துவதற்கு மாநில அரசின் ஒப்புதல் தேவை இல்லை.

விரைவில் தேர்தலை நடத்த அறிவுறுத்தல்: குடியரசு தலைவர், மத்திய அரசின் ஒப்புதலை பெறுவது தவறான விஷயம் எனவும் குறிப்பிட இயலாது. ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் 30 செப்டம்பர் 2024க்குள் நடைபெறும் வகையில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்பதை நாங்கள் நம்புகிறோம். ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது உறுதி செய்யப்படுகிறது. ஜம்மு-காஷ்மீர் மாநில அந்தஸ்து தொடர்பான விவகாரத்தில் மத்திய அரசு விரைந்து செயல்பட்டு அதனை நிறைவேற்ற வேண்டும். லடாக்கை யூனியன் பிரதேசமாக மறுசீரமைப்பு செய்ய வேண்டும்" என தெரிவித்தனர்.