UFO Found Colombia (Photo Credit: YouTube)

ஏப்ரல் 12, கொலம்பியா (World News): தென் அமெரிக்காவில் உள்ள கொலம்பியா, ஆன்டியோகுயா நகரில் கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் 12ம் தேதி நடுவானில் விமானம் பறந்துகொண்டு இருந்துள்ளது. விமானத்தின் பைலட்டுகளாக ஜியார்ஜ் ஏ, டேனியல் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். இவர்களின் விமானம் மெடிலின் - சேண்டா ஃபீ (Medellin - Santa Fe) பகுதியில் கடக்கும் போது வானில் மர்ம பொருள் தென்பட்டுள்ளது.

இந்த பொருளானது பார்க்க வட்ட வடிவமும் இன்றி நீள்வட்ட தோற்றத்துடன், கிட்டத்தட்ட திரைப்படங்களில் பார்க்கும் பறக்கும் தட்டுகளை போல தோன்றியுள்ளது. அதனை கவனித்த பயணிகள், சம்பவத்தை தங்களின் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். அப்போது, அந்த மர்ம பொருள், வானில் 12,500 அடி உயரத்தில் பறந்துள்ளது. DC Vs MI: முதல் வெற்றியை பதிவு செய்த மும்பை அணியின் சாகசத்தை நேரலையில் பார்த்தவர்கள் எண்ணிக்கை தெரியுமா?.. அசத்தல் தகவல் இதோ.!

விமானத்தில் இருந்து சில மீட்டர் தூரத்தில் அதிவேகத்தில் பயணம் செய்த மர்ம பொருள் நொடியில் மறைந்தும் போனது. விமானிகளின் கூற்றுப்படி அந்த மர்ம பொருள் மணிக்கு 300 கி.மீ வேகத்தில் பறக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். அந்த மர்ம பொருள் டிரோனா? ஏலியன் தட்டா? என்பது குறித்த எந்த தகவலும் இல்லை. இந்த வீடியோ தற்போது யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டு, அது வைரலாகி வருகிறது.