நவம்பர் 02, ஆக்ரா (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ரா மாவட்டம், ஜெகதீஸ்புரா பகுதியை சேர்ந்தவர் ஆஷிஷ் குமார். இவரின் மனைவி ரூபி (வயது 35). தம்பதிகளுக்கு கடந்த 2015ம் ஆண்டு திருமணம் நடைபெற்று முடிந்தது. இருவரின் இல்லற வாழ்க்கைக்கு அடையாளமாக 3 குழந்தைகள் இருக்கின்றனர்.

இந்நிலையில், ஆஷிஷ் மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு ஆண் குழந்தை வாரிசு வேண்டும் என்ற எண்ணம் இருந்துள்ளது. இதனால் ஆண் குழந்தை பெற்றுத்தர வேண்டும் என ரூபியை கணவர் மற்றும் அவரின் குடும்பத்தார் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.

அதற்காக பல ஆயுர்வேத மருந்துகள், மாத்திரைகள் போன்றவற்றை தொடர்ச்சியாக உட்கொள்ள வைத்துள்ளனர். இதனால் தற்போது 2 கிட்னியும் கடுமையாக பாதிக்கப்பட்டு, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இருப்பினும், கணவரின் குடும்பத்தாரின் தொல்லை தாங்கவில்லை. Karnataka Shocker: கார் விற்பனை செய்த விவகாரத்தில் வாடிக்கையாளர் - டீலர் இடையே வாக்குவாதம்; ஆத்திரத்தில் கார் ஏற்றி கொடூர கொலை.! 

இதனையடுத்து, தனது பெற்றோருக்கு பெண்மணி தகவல் தெரிவிக்கவே, அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். முதலில் பாதிக்கப்பட்ட பெண்மணி முன்னதாகவே கணவர் மற்றும் அவரின் குடும்பத்தாருக்கு எதிராக புகார் அளித்துள்ளனர். ஆனால், காவல் துறையினர் அதனை விசாரணைக்கு எடுக்கவில்லை.

தற்போது 2 கிட்னிகளும் முழுவதுமாக செயலிழந்து சிகிச்சை பெற்று வரும் பெண்மணி, உயர் அதிகாரிகளுக்கு மனு அளித்ததை தொடர்ந்து, காவல் துறையினர் பெண்ணின் புகாரை ஏற்றுள்ளனர். மேலும், அவரது புகாரின் பேரில் கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பெண்மணி தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.