நவம்பர் 02, பெங்களூர் (Bangalore): கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், புலிகேசி நகர் பகுதியில் கடந்த அக்.18ம் தேதி நள்ளிரவு 12:30 மணியளவில் கார் டீலர் அஸ்கர் என்பவர், அம்ரீன் என்ற வாடிக்கையாளரால் கார் ஏற்றி கொலை செய்ய முயற்சிக்கப்பட்டார். படுகாயத்துடன் மீட்கப்பட்ட அஸ்கர், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த அக்.18 அன்று அவர் தப்பிக்க சாலையில் அங்கும்-இங்கும் ஓடி, பின் காரின் சக்கரத்தில் சிக்கிய பதைபதைப்பு வீடியோ காட்சிகள் கேமிராவில் பதிவாகி தற்போது வெளியாகியுள்ளன. விசாரணையில், கார் டீலர் அஸ்கரிடம் ரூ.4 இலட்சம் பணம் கொடுக்காமலே அம்ரீன் காரை எடுத்து சென்று, இருவருக்கும் பிரச்சனை நடந்தது அம்பலமானது. இந்த பதைபதைப்பு சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Arvind Kejriwal not Appear to ED: அமலாக்கத்துறை அலுவலகத்தில் டெல்லி முதல்வர் ஆஜராக மறுப்பு - ம.பி-யில் தேர்தல் பிரச்சாரம் தீவிரம்.! 

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)