Snips from Trending Video (Photo Credit: Twitter)

செப்டம்பர் 16, வாசிர்கஞ்ச் (Social Viral): தொழில்நுட்ப சாதனங்களின் பயன்பாடு மனிதர்களின் ஒவ்வொரு தேவையையும் எளிமையான வகையில் பூர்த்தி செய்கிறது. இதனை வளர்ச்சிக்காக பயன்படுத்துவது மட்டுமே சிறந்த உதாரணமாக இருக்கும்.

மாறாக நாம் நமது அலட்சியத்தனமான செயலை வெளிப்படுத்தும் பட்சத்தில், அதுதொடர்பான பின்விளைவை கட்டாயம் சந்திக்க வேண்டியிருக்கும். இன்ஸ்டாகிராம் ரீலிஸ் மோகம் இன்றளவில் பெரிய தாக்கத்தினை இளம் தலைமுறையிடம் ஏற்படுத்திவிட்டது.

ஓடும் இரயில் முன்பு ரீல்ஸ் எடுப்பதில் தொடங்கி, எங்கும்-எப்போதும் ரீல்ஸ் மயமாகி இருக்கிறது. இதனை அலட்சியத்தோடு கையாளும் இளைஞர்களின் உயிர் நொடியில் பறிபோகும் சம்பவமும் நடக்கின்றன. Car Truck Accident: கார் - லாரி மோதிக்கொண்டு பயங்கர விபத்து; 4 பேர் உடல் நசுங்கி பரிதாப பலி.! 

இந்நிலையில், உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள Budaun மாவட்டம், வாசிர்கஞ்ச் பகுதியை சேர்ந்த இரண்டு இளைஞர்கள், அங்குள்ள காவல் நிலையத்தில் ரீல்ஸ் எடுத்து சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவு செய்துள்ளனர்.

இந்த வீடியோ அங்குள்ள மக்களிடையே சமூக வலைத்தளம் வாயிலாக வைரலாகவே, காவல் துறையினரின் கவனத்திற்கு சென்றுள்ளது. இதனையடுத்து, அதிகாரிகள் வழக்குப்பதிந்து இரண்டு நபர்களையும் கைது செய்தனர்.