Car Crashed in Canal (Photo Credit: @ANIUP X)

மார்ச் 04, புலந்த்சாகர் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள புலந்த்சஹார், ஜஹாங்கிர்பூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் கால்வாய் ஒன்று உள்ளது. இந்நிலையில், இன்று கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.

விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர், துரிதமாக செயல்பட்டு படகுகள் உதவியுடன் நீரில் தத்தளித்து உயிருக்கு போராடிய 5 பேரை பத்திரமாக மீட்டனர். இவர்களை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். Spinal Muscular Atrophy: காவலரின் மகனுக்கு இப்படி ஒரு சோகமா?.. ரூ.17.5 கோடி ஊசிக்காக உதவி கேட்டு கோரிக்கை.! 

Car Crash into Canal (Photo Credit: @ANIUP X)

மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்களில் ஒருவர் உயிரிழந்துவிட, 2 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 2 பேர் எவ்வித காயமும் இன்றி உயிர்தப்பினர்.

விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் சிக்கியவர்கள் விபரமும் சேகரிக்கப்பட்டு வருகின்றன. 3 பேரின் நிலை தெரியவில்லை என்பதால், அவர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.