செப்டம்பர் 26, காசியாபாத் (Social Viral): இந்தியாவின் மிகப்பெரிய துறையாக இருப்பது இரயில்வே. இத்துறையில் 12 இலட்சத்திற்கும் அதிகமான பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். 18 மண்டலங்கள் மூலமாக மக்களுக்கு இரயில் சேவை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
இரயில்களில் பயணம் செய்யும் மக்கள் விரைந்த பயணத்தை பாதுகாப்பாக மேற்கொள்ள தேவையான பல்வேறு முயற்சிகள் தொடர்ந்து இரயில்வே நிர்வாகத்தால் எடுக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு இரயில் நிலையத்திலும் காவலர்களின் கண்காணிப்பு என்பது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. Raghava Blessed by Rajinikanth: சந்திரமுகி 2 வெற்றியடைய ரஜினியை சந்தித்து ஆசிபெற்ற ராகவா லாரன்ஸ்: அசத்தல் தகவல் இதோ.! ரசிகர்கள் கொண்டாட்டம்.!
இது இரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல், அவர்களின் பயண பாதுகாப்பையும் வழங்குகிறது. இரயில் நிலையங்களில் கண்காணிப்பு பணியில் இருக்கும் அதிகாரிகள், நொடிகளில் பல உயிர்களை காப்பாற்றி இருக்கிறார்கள்.
தற்போது உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காசியாபாத் இரயில் நிலையத்தில், ஓடும் இரயிலில் ஏற முயற்சித்து சமநிலையை இழந்து உயிருக்கு போராடி தொங்கியபடி பயணித்த பயணியை இரயில்வே பாதுகாவலர்கள் விரைந்து செயல்பட்டு பத்திரமாக மீட்டனர்.
ஓடும் இரயிலில் ஏறுவதும், இறங்குவதும் உயிரை எமன் முன் நிறுத்தி கொண்டு வருவதற்கு சமம். சிறு தவறு கூட நமது உயிரை பறிக்கும் என்பதை ஒவ்வொருவரும் புரிந்து செயல்பட வேண்டும். பாதுகாப்பான இரயில் பயணத்தை மேற்கொள்வது நமது கடமையும் கூட என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
#Ghaziabad #गाजियाबाद रेलवे स्टेशन पर चलती #ट्रेन में चढ़ने की कोशिश !#यात्री का बैलेंस बिगडा और वह लटक गया !#आरपीएफ स्टाफ की #सतर्कता से बची यात्री की जान !@RPFCR @SudarshanNewsUp #viralvideo pic.twitter.com/gztkGJYkVl
— Anand Mishra (@AnandMi38424236) September 25, 2023