Dogs Carrying Woman's Health Status (Photo Credit: @buitengebieden X)

மார்ச் 15, புதுடெல்லி (Trending News): ஒவ்வொரு வீட்டிலும் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளில், நாய்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும். வீட்டில் செல்லப்பிராணியாக அலறும் நாய்கள், விசுவாசம், நன்றி உணர்வு, பாசத்துக்கு பெயர்போனவை ஆகும். எப்போதும் சுறுசுறுப்புடன் இருக்கும் நாய்கள், உரிமையாளர்களுக்கு ஒரு தீங்கு என்றால் எதிராளியை மூர்கத்தனத்துடன் விரட்டி அடிக்கும். அவற்றின் விசுவாசத்துக்கு ஆதாரமாக, பல நாய்கள் உரிமையாளரை காப்பாற்ற பாம்புடன் சண்டையிட்டு மரணித்த வீடியோ சாட்சியாக அமையும். Murder Attempt: கார் மோதியதில் தலைகீழாக தொங்கி பரிதவித்த இளம்பெண்.. இருதரப்பு மோதலில் பகீர்.. பதறவைக்கும் காட்சிகள்.!

வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ;

இந்நிலையில், சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த விடியோவில், நாய்கள் கூட்டமாக கிளினிக்கில் இருந்தன. அப்போது, பெண் ஒருவர் எதிர்பாராத விதமாக நாயின் மீது மிதித்து, தவறி கீழே விழுந்தார். இதனால் பதறிப்போன நாய்கள், பெண்ணுக்கு என்ன ஆனது? என நலம் விசாரிப்பதைப்போல, அவரை சூழ்ந்துகொண்டது. இதுதொடர்பான நெகிழவைக்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோ எங்கு? எப்போது? எடுக்கப்பட்டது என விபரம் இல்லை.

நாய்களின் நெகிழ்ச்சி செயல் பதிவான வீடியோ: