ஆகஸ்ட் 25, நந்திகமா (Andhra Pradesh News): ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள என்.டி.ஆர் மாவட்டம், பென்னுகஞ்சிப்ரோலு, தொட்டசர்ல கிராமத்தில் இன்று பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. தேசிய நெடுஞ்சாலை எண் 65ல் ஏற்பட்ட இவ்விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 10 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் மீட்கப்பட்டு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளனர். விபத்து குறித்து தகவல் அறிந்த நந்திகமா துணை காவல் கண்காணிப்பாளர் ஜனார்த்தனன், நேரடியாக நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டார். பேருந்து விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. Fake Call Center Busted: “உங்க கம்பியூட்டரில் வைரஸ் பரவிவிட்டது” – போலி கால்சென்டர் கும்பல் நூதன கைவரிசை.. 14 பேர் அதிரடி கைது.!
#WATCH | Andhra Pradesh | Around 10 people were injured after a bus overturned on NH65 near Totacharla village of Penuganchiprolu Mandal in the NTR district. The injured were shifted to the hospital: Janardhan, ACP Nandigama.
(Visuals from accident site) pic.twitter.com/kCxSzrQCvr
— ANI (@ANI) August 25, 2023
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)