அக்டோபர் 13, மும்பை (Socially): சாலை பயணங்களில் விபத்துகள் என்பவை தவிர்க்க முடியாதவை, எப்போதும் நேர வாய்ப்புள்ளவை. ஆனால், இவை அனைத்தும் விதிகளை நொடியில் மீறுவதால் அதிகளவு நடைபெறுகிறது என்பதே நிதர்சனம். இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் கார் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளின் பொறுமையின்மையால் நடந்த விபத்தின் காணொளி வெளியாகியுள்ளது. காரில் வந்தவர் நொடிப்பொழுது காத்திருந்தாலோ, இருசக்கர வாகனத்தில் வந்தவர் சாலையை கடக்கும் இடத்தில் மெதுவாக செல்ல வேண்டும் என்ற விதியை கடைபிடித்து இருந்தாலோ இருவரும் வீட்டிற்கு சென்று இருக்கலாம். இப்பொது ஒருவர் மருத்துவமனையிலும், மற்றொருவர் வழக்கு விவகாரத்திலும் சிக்கி தங்களின் நேரத்தை இழக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இது ஒவ்வொருவருக்கும் பாடம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வு மும்பையில் உள்ள நன்தேட் (Nanded) பகுதியில் நடந்தது. Israel Palestine War: காசா நகருக்குள் களமிறங்க பாலஸ்தீனிய எல்லையில் குவிக்கப்படும் இஸ்ரேல் இராணுவம்.! 

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)