ஜூலை 15, ஹைதராபாத் (Hyderabad News): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத், பஞ்சகுட்டா பகுதியில் பிவிஆர் திரையரங்கம் (PVR Cinema) செயல்பட்டு வருகிறது. இந்த திரையரங்கில் பிரபாஸின் கல்கி (Kalki AD 2898) திரைப்படம் திரையிடப்பட்டது. காட்சிகள் தொடங்கி பார்வையாளர்கள் பலரும் ஆவலுடன் படத்தை பார்த்துக்கொண்டு இருந்தனர். அச்சமயம் திடீரென திரையரங்கின் மேல்பகுதியில் இருந்து மழை நீர் கசிந்தது. இதனால் தொடர்ந்து பார்வையாளர்களால் படம் பார்க்க முடியவில்லை. இதனையடுத்து, திரையரங்க நிர்வாகம் படத்தை நிறுத்திவிட்டு, தங்களின் நிலைமைக்கு வருந்தி மன்னிப்புக்கேட்டது. திரையரங்குக்குள் மழை பெய்த வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.

திரையரங்கில் காட்சிகள் நிறுத்தப்பட்ட காட்சி:

மழை நீர் விழுந்த காட்சி:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)