Delhi CM Arvind Kejriwal (Photo Credit: @ANI X)

நவம்பர் 02, புதுடெல்லி (New Delhi): டெல்லி மாநிலத்தில் ஆம் ஆத்மி (Aam Aadmi Party-AAP) தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அம்மாநிலத்தில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மிக்கும் - மத்திய ஆளும் (Central Govt) கட்சியான பாஜகவுக்கும் (BJP) இடையே பல அரசியல் பிரச்சனைகள் நடந்து வருகின்றன. டெல்லியிலும் (Delhi) தனது ஆட்சியை உறுதிப்படுத்தும் நோக்கில் பாஜக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே, டெல்லியில் அம்மாநில ஆளும்கட்சியால் கொண்டு வரப்பட்ட புதிய மதுபான (Delhi excise policy scam) கொள்கை திட்டத்தில், அரசு பணம் ரூ.338 கோடியை அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் (Arvind Kejriwal), துணை முதல்வர் மணீஷ் சிசோடியா (Manish Sisodia), ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் & பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங் (Sanjay Singh) ஆகியோர் கொள்ளையடித்ததாக பாஜக குற்றச்சாட்டை முன்வைத்தது. Police Jeep Stolen: போலீஸ் வாகனத்தை திருடிச்சென்ற நிர்வாண இளைஞர்; ஜிடிஏ வை சிட்டி கேம்போல பகீர் சம்பவம்.! 

இதுகுறித்து நடந்த விசாரணையை தொடர்ந்து, எம்.பி சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டார். அவருக்கு நவ.10ம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. டெல்லி மாநில துணை முதல்வர் மணீஷ் கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டு, ஜாமினுக்கு போராடி வருகிறார். அவரின் ஜாமின் மனு தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, அமலாக்கத்துறையினர் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், நவம்பர் 2ம் தேதி அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் வழங்கியது.

இந்நிலையில், டெல்லி முதல்வர் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், அமலாக்கத்துறை விசாரணைக்கு இன்று ஆராஜகவில்லை. அவர் மத்தியபிரதேசம் மாநில தேர்தல் பிரச்சாரத்தையொட்டி, அங்குள்ள சிங்ராளி பகுதியில் பஞ்சாப் மாநில முதல்வர் பகவத் மானுடன் சாலைப்பேரணி நடத்துகிறார்.