ஜனவரி 20, பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்லாரியை (Bellare, Karnataka) சேர்ந்த பாஜக பிரமுகர் பிரவீன் நேட்டாரு (Praveen Nettaru, BJP Party) கடந்த ஜூலை 26, 2022ல் படுகொலை செய்யப்பட்டார். இந்த விஷயம் தொடர்பான விசாரணையில் இறங்கிய தேசிய புலனாய்வு முகமை (National Investigation Agency-NIA) அதிகாரிகள், கன்னடா மாவட்டத்தை (Kannada District) சேர்ந்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (Popular Front of India-PTI) அமைப்பை சேர்ந்த முகம்மத் ஷெரீப் (வயது 53), மசூத் கா (வயது 40) ஆகியோரை குற்றவாளியாக அறிவித்தது. அவர்களை அதிகாரிகள் தேடி வரும் நிலையில், இருவர் குறித்த தகவலை தெரிவிப்போருக்கு ரூ.5 இலட்சம் பரிசு (Reward Rs.5 Lakhs INR) வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும், தகவல் தெரிவிப்போரின் தனிப்பட்ட விபரங்கள் பாதுகாக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. Ukraine President Jelansky Speech: ரஷிய அதிபர் புதின் இறந்துவிட்டாரா? – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பரபரப்பு பேச்சு.!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)