பிப்ரவரி 09, கனககிரி: கர்நாடக மாநிலத்தில் உள்ள (Koppal, Karnataka) கொப்பல் மாவட்டம், கனககிரி (Kanakagiri) கிராமத்தில் தலித் சமூகத்தை (Dalit Women) சேர்ந்த பெண்மணி வசித்து வருகிறார். இவர் மாடு மேய்த்துக்கொண்டு இருந்தபோது, எதிர்பாராத விதமாக மாடு அங்குள்ள மற்றொரு உயர்ஜாதி சமூகத்தை சேர்ந்தவரின் தோட்டத்திற்குள் புகுந்ததாக தெரியவருகிறது. அதனை பிடித்து வர பெண்மணி சென்றபோது, ஜாதிய பாகுபாடு எண்ணம் கொண்ட அம்பரேஷ் கம்பர் (Accuse Ambaresh Kambar) என்பவர் பெண்ணை தென்னை மரத்தில் கட்டிவைத்து கடுமையாக தாக்கியுள்ளார். வலிபொறுக்க இயலாத பெண்மணி தன்னை விட்டுவிடும்படி கதறியழுதார். இதுகுறித்த பதறவைக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகவே, கனககிரி காவல் துறையினர் (Kanakagiri Police) அம்பரேஷை கைது செய்தனர். பெண்மணி சிகிச்சைக்கு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். Jammu Doda Village Sinking: ஜோஷிமத் போல பெரும் பாதிப்பை சந்திக்கும் ஜம்முவின் தோடா.. அதிர்ச்சி சம்பவம் அம்பலம்.!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)