ஜூன் 28, மும்பை (Maharashtra News): மகாராஷ்டிரா மாநில (Maharashtra Fishermen) மீனவர்கள் அரபிக்கடல் பகுதியில் மீன்பிடிக்கும்போது, சில நேரத்தில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக பாகிஸ்தான் கடற்படை அவர்களை கைது செய்யும் சூழல் ஏற்படும். குஜராத் மாநில மீனவர்களுக்கும் இதே நிலை தான். மீனவர்கள் கைது செய்யப்படும் பட்சத்தில், அவர்களின் குடும்ப சூழலை கருத்தில் கொண்டு குஜராத் மாநில அரசு மீனவர்களின் குடும்பத்திற்கு அவர்கள் கைது செய்யப்பட்ட நாட்களில் இருந்து அவர்கள் விடுதலையாகும் வரை நாளுக்கு ரூ.300 அரசின் சார்பில் வழங்கப்படும். இதேபோன்ற செயல்முறையை மகாராஷ்டிரா மாநிலத்திலும் அமல்படுத்த அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இந்த அறிவிப்பு விரைவில் செயல்படுத்தப்படும். Kamal Hassan on Indian 2: ஷங்கரின் படைப்பிலேயே இதுதான் உச்சக்கட்டம்; இந்தியன் 2 படம்பார்த்து வியந்துபோன கமல்ஹாசன் பாராட்டு.!
Maharashtra Cabinet has decided to provide Rs 300/day to the families of the fishermen caught by Pakistan. This amount will be given to the families from the date when the fisherman was detained by Pakistan after due verification by Panchayat and Talathi etc. Gujarat Govt already…
— ANI (@ANI) June 28, 2023
பாக். கடற்படையால் மகாராஷ்டிரா மாநில மீனவர் கைதானால், அவரின் குடும்பத்திற்கு விடுதலையாகும் வரை நாளொன்றுக்கு ரூ.300 நிதிஉதவி அளிக்க மாநில அமைச்சரவை ஒப்புதல்.
குஜராத் மாநிலத்தை தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலத்திலும் மீனவர்களுக்கான திட்டம் அமல்.. #Maharashtra | #Fishermen pic.twitter.com/edvZQt5FM9
— Sriramrpckanna (@Sriramrpckanna1) June 28, 2023
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)