SVIMS Hospital: பெண் மருத்துவரை கடுமையாக தாக்கிய நோயாளி; மருத்துவமனை வளாகத்திலேயே பகீர் சம்பவம்.!

மருத்துவமனை வளாகத்திலேயே பெண் மருத்துவர் நோயாளி ஒருவரால் சக நோயாளிகள் முன் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

SVIMS Hospital: பெண் மருத்துவரை கடுமையாக தாக்கிய நோயாளி; மருத்துவமனை வளாகத்திலேயே பகீர் சம்பவம்.!
SVIMS Hospital, Tirupati (Photo Credit: @DrDhruvchauhan X)

ஆகஸ்ட் 27, திருப்பதி (Andhra Pradesh News): ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள திருப்தியில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவ ஆராய்ச்சி & மருத்துவக்கல்லூரி (Sri Venkateswara Institute of Medical Sciences SVIMS) செயல்பட்டு வருகிறது. இங்கு உள்நோயாளிகள் & புறநோயாளிகள் என ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனிடையே, சம்பவத்தன்று நோயாளிகளை பார்வையிட வந்த பெண் மருத்துவரை, அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளி பங்காரு ராஜு என்பவர் சரமாரியாக தாக்கிய சம்பவம் நடந்துள்ளது. பெண் மருத்துவரின் முடியை பிடித்து இழுத்து, கட்டிலின் இரும்பு பாகத்தில் தள்ளி தாக்கி இருக்கிறார். இந்த சம்பவம் குறித்த சிசிடிவி கேமிரா காட்சிகள் வெளியாகி கண்டனத்தை பெற்று வருகிறது. ஏற்கனவே கொல்கத்தாவில் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட விவகாரத்தில், நீதிகேட்டு போராட்டம் நடந்துவருகிறது, சிபிஐ விசாரணை நடந்து வருகிறது. Trichy Shocker: இரயில் நிற்பதிற்குள் அவசரம்; நூலிழையில் உயிர்தப்பிய முன்னாள் இரயில்வே பணியாளர்.. திருச்சி இரயில் நிலையத்தில் அதிர்ச்சி.!  

மருத்துவர் தாக்கப்பட்ட பதைபதைப்பு காணொளி:

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 27, 2024 02:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).