டிசம்பர் 21, புதுடெல்லி (New Delhi): ஓடும் ரயில்களில் ஏறவோ இறங்கவோ கூடாது என்பது காலம் காலமாக பலருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரும் விஷயங்களில் ஒன்றாக இருக்கிறது. தொலைதூரப் பயணங்களை மேற்கொள்வோர், தங்களின் இரயில் பயணத்திற்கு முன்னதாகவே கிளம்பி ரயில் நிலையத்திற்கு வருவது சரியாக இருக்கும். இறுதி கட்டத்தில் அவசர அவசரமாக வந்து, ரயில் மெதுவாக நகர்ந்து கொண்டு இருக்கும்போது அதில் ஏற, இறங்க முயற்சிப்பது நமது உயிருக்கு ஆபத்தை தரும் வகையில் அமையலாம். இந்த நிலையில், பெண்மணி ஒருவர் ஓடும் ரயில் நேரம் முற்பட்டபோது, அவர் தவறி கீழே விழுந்து விடுகிறார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரி, உடனடியாக செயல்பட்டு பெண்ணை காப்பாற்றினார். அதிகாரியின் செயல் பாராட்டுகளை பெறுகிறது. எனினும், ஓடும் ரயில்களில் ஏறக்கூடாது என்றும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த வீடியோ ரயில்வே நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. Kerala Corona Update: கேரளாவில் இன்று 300 பேருக்கு கொரோனா உறுதி., 3 பேர் பலி.. மீண்டும் உயரும் பாதிப்பால் மக்களால் அச்சம்: மாநில அரசு அறிவிப்பு..! 

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)