செப்டம்பர் 20, வடவள்ளி (Coimbatore News): விபத்து உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் இருசக்கர வாகனங்களை ஓட்டிச் செல்பவர்கள் மட்டு மல்லாமல் பின் இருக்கையில் அமர்ந்து பயணிப்பவர்களும் தலைக்கவசம் (ஹெல்மெட்) அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியில் வடவள்ளி காவல்துறையினர் மற்றும் அண்ணா பல்கலைக்கழக மாணவ மாணவியர்கள் சார்பில் தலைக்கவசம் உயிர்க்கவசம் என்ற பெயரில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், இருசக்கர வாகன விபத்துகளில் ஏற்படும் பெரும்பாலான உயிரிழப்புகள் ஹெல்மெட் அணியாமல் செல்வதால் ஏற்படுவது குறித்து விளக்கப்பட்டது. இருசக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் எனவும், ஓட்டுநர் மற்றும் பின்னிருக்கையில் அமர்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் எனவும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. TVK Public Rally: "விரைவில் சந்திப்போம்!! வாகை சூடுவோம்!!" - கட்சியின் மாநாடு தேதியை அறிவித்த தளபதி..!
தலைக்கவசம் விழிப்புணர்வு முகாம்:
கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியில் வடவள்ளி காவல்துறையினர் மற்றும் அண்ணா பல்கலைக்கழக மாணவ மாணவியர்கள் சார்பில் தலைக்கவசம் உயிர்க்கவசம் என்ற பெயரில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. #TamilNews pic.twitter.com/XV0hNaDnLw
— Backiya (@backiya28) September 20, 2024
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)